இரானில் தொடங்கிய களேபரங்கள் முடிந்தபாடில்லை. அதற்குள் தனது அடுத்த இலக்கு என கியூபாவை நோக்கித் திரும்பியிருக்கிறார் டிரம்ப்.
ஆனால் இது அமெரிக்காவின் திடீர் முடிவல்ல. பனிப்போர் காலம் தொடங்கி, தொடர்ச்சியாக கியூபாவை ஆக்கிரமிக்க முயல்கிறது அமெரிக்கா. அவை எதுவும் முழு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. சரித்திரத்தில் என்றும் இல்லாத அளவுக்கு இன்றைக்கு அவ்வெண்ணம் சாத்தியமாவதற்கான சூழல் நிலவுகிறது. போரில் சாய்ந்த குதிரை போல வீழ்ந்து கிடக்கிறது கியூபா.
மொத்த கியூபாவுமே பொருளாதாரச் சீரழிவுகளால் சிதைந்து போய் கிடக்கிறது. வறுமையிலிருந்து தப்பித்து உயிர் வாழ்வதே பெரும் போராட்டமாக மாறியிருக்கிறது. இதில் சரிபாதி அமெரிக்கக் கைங்கரியத்தால் நிகழ்ந்தாலும், கியூபாவை ஆளும் கம்யூனிஸ்ட் அரசும் மற்றொரு காரணமாக இருக்கிறது.















Add Comment