இந்திய தேசம் முழுக்க நாடி நரம்பு போலப் பரவிக் கிடக்கும் ரயில்வே துறை, சுதந்தரத்துக்கு முன் தனியார் கட்டுப்பாட்டில் இருந்தது. சுதந்தரம் அடைந்த பிறகு 1951 ஏப்ரல் 14 அன்று தேசியமயமாக்கப்பட்டது.
ஆக, இந்திய ரயில்வே தேசியமயமாக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகின்ற இவ்வேளையில் அது தேசியமயமாக்கப்பட்டதன் பின்னணி முதல் இப்போது வரை சாதித்திருப்பது என்ன?
இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் விளைந்த பருத்தியை பிரிட்டனின் நூற்பாலைகளுக்குத் துறைமுகங்கள் வாயிலாக விரைவாகக் கொண்டு செல்லவும், பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினரின் விரைவான பயணத்திற்குமான தேவை அதிகரிக்க அதிகரிக்க, நாடு. முழுவதும் ரயில்வே பாதைகள் உருவாக்கப்பட்டன.
இதற்காக 1845இல் East Indian Railway Company உருவாக்கப்பட்டது. இந்தியாவின் முதல் பயணிகள் ரயிலை பம்பாயிலிருந்தும், கல்கத்தாவிலிருந்தும் இயக்கத் திட்டமிட்டனர். இதில் பம்பாய் நிர்வாகத்திற்கென போரீபந்தரைத் தலைமையிடமாகக் கொண்டு 1849 ஆகஸ்ட் 1ல் தி கிரேட் இந்தியன் பெனின்சுலா ரயில்வே நிறுவப்பட்டது.















Add Comment