ஜேன் பியர்ஸ்
ஆழ்ந்த மதப்பற்றும், பொருந்தாத திருமணமும் சாதாரணர்களுக்கு மட்டும் அல்ல, அதிகாரம் மிக்கவர்களுக்கும் மன அழுத்தத்தைத் தரும். பிள்ளைகளை இழந்த துயரத்தில் இருந்து மீண்டு வருவது வெகு சிலருக்கே சாத்தியம். அந்த ஒரு சிலரில் நாம் இங்கு காணப்போகும் ஜேன் பியர்ஸ் ஒருவர் அல்லர். மாறாக, தன் கணவரின் அரசியல் ஆசைகள் என்ற பாவத்தின் தண்டனையாக இறைவன் தங்கள் குழந்தைகளைப் பறித்துக்கொண்டதாக நினைத்தார்.
அமெரிக்காவின் பதினான்காவது அதிபர் ஃப்ராங்க்ளின் பியர்ஸின் மனைவிதான் ஜேன் பியர்ஸ். இவரை வரலாற்றாசிரியர்கள் ‘வெள்ளை மாளிகையின் நிழல்’ என்று அழைப்பார்கள். அந்த நிழல் வெறும் தனிமையின் நிழல் மட்டுமல்ல, ஆழமான மதப்பற்றின் நிழல். மூன்று குழந்தைகளை இழந்த தாயின் துயரின் நிழல். அரசியலை வெறுத்த ஓர் இதயத்தின் நிழல்.
1806ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி நியூ ஹேம்ப்ஷயரின் ஹாம்ப்டனில் ஜேன் மீன்ஸ் ஆப்பிள்டன் (Jane Means Appleton) பிறந்தார். கான்கிரிகேஷனலிஸ்ட் மதகுருவான அவருடைய தந்தை ஜெஸ்ஸி ஆப்பிள்டன் (Jesse Appleton), 1807இல் மெயின் மாநிலத்திலுள்ள பவுடோயின் கல்லூரியின் தலைவரானார். குடும்பமும் புரன்ஸ்விக்குக்குக் குடிபெயர்ந்தது.















Add Comment