இரான் போரினால் ஏற்பட்ட உலகளாவிய எண்ணெய்ப் பற்றாக்குறையைத் திறம்படக் கையாண்டுள்ளது இந்தியா. தன்னுடைய ராஜதந்திர அணுகுமுறைகளின் மூலம் தன் மக்களைப் பாதுகாத்துள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்திய மக்கள் குறைவான அளவே சிரமங்களை எதிர்கொண்டனர். கடந்த காலத்தில் உக்ரைன் போரினால் ஏற்பட்ட எண்ணெய்ப் பற்றாக்குறையையும் இந்தியா சிறப்பாகக் கையாண்டிருந்தது. இந்தியா கடைப்பிடிக்கும் உத்திகள் எத்தகையவை? பார்ப்போம்.
உலகளாவிய எண்ணெய்ச் சந்தைகள் நெருக்கடி நிலைக்குச் செல்லும்போது, பெரும்பாலான பெரிய இறக்குமதி நாடுகள் சில வரையறுக்கப்பட்ட வழிமுறைகளையே கையாண்டு வந்துள்ளன.
இறக்குமதிப் பங்கீடு (Import Rationing) அவற்றுள் ஒன்று. வெளிநாட்டு இறக்குமதிகளைக் குறைப்பதன் மூலம் அந்நியச் செலாவணிக் கையிருப்பைப் பாதுகாக்கும் உத்தி அது. அவசரகால எண்ணெய்க் கையிருப்பை வெளியிடுதல் என்பது மற்றொரு உத்தி.















Add Comment