நார்னியா திரைப்படத்தில் அலமாரிக்குள் இருந்து ஒரு ராஜ்ஜியம் விரியும் காட்சியை வைத்திருப்பார்கள். வெளியுலகத்தோடு தொடர்பில்லாதவொரு மாயாஜாலம் பொருந்திய மர்ம பேரரசு. நூற்றாண்டுக் காலமாக அந்த இடத்தைக் குளிர்காலத்தில் வைத்து ஆட்செய்யும் கொடுங்கோல் என்ற வகையில் அதன் கதை இருக்கும். வட கொரியா, நிஜ உலகத்தின் மர்மதேசம்.
நடந்தது என்னவோ அந்நாட்டின் கட்சி வருடாந்திர கூட்டம். ஆனால் உலக நாடுகளெல்லாம் தங்கள் வேலைகளை ஓரங்கட்டிவிட்டு வடகொரிய அதிபர் கிம் பேசியதை ஆராய்ந்து வருகின்றன.
‘தென்கொரியாவுடனான இணைப்பு என்பது இனிமேல் சாத்தியப்படாத ஒன்று. அவர்கள்தான் இனி நம்முடைய முதன்மையான எதிரி. நாம் போரை விரும்பவில்லை, அப்படியொன்று வருமானால் அதைத் தவிர்க்கும் எண்ணம் இல்லை. அதையும் மீறி, போர் வரும் பட்சத்தில் தென்கொரியாவை முழுமையாக ஆக்கிரமித்து அடிபணிய செய்ய வேண்டும். இனியும் அவர்களைச் சகநாட்டு மக்கள் என்று குறிப்பிடத் தேவையில்லை.’
Add Comment