திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது கற்காலம். இன்று அவை இணையத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. நிச்சயம் என்றால் மாப்பிள்ளையும் பெண்ணும் பேசிப் பார்த்துச் சம்மதம் சொல்வது மட்டுமல்ல. பெரியவர்கள் தட்டு மாற்றிக் கொள்ளும் சடங்குகூட கூடப் பெரும்பாலும் ஆன்லைனிலேயே நடந்து முடிந்துவிடுகிறது. குறிப்பாக பையனோ பெண்ணோ அல்லது இருவருமேவோ என்.ஆர்.ஐ என்றால் தொண்ணூற்றொன்பது சதவீதத் திருமணங்கள் இப்படித்தான் இன்று முடிவாகின்றன.
அயல்நாட்டில் வசிக்கும் மாப்பிள்ளை / பெண் என்று முடிவு செய்துவிட்டால், பெற்றோர்கள் முதலில் அக்கறை செலுத்துவது அவர்கள் வசிக்கும் நாடு எது என்பதில்தான். அந்த நாட்டின் தட்ப வெப்ப நிலை, இடத்தின் பாதுகாப்பு, அங்குள்ள உணவு முறைகள், வாழ்க்கை முறை சரிப்பட்டு வரவேண்டும் என்று பார்ப்பார்கள்…
Add Comment