Home » ஆபீஸ் – 71
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 71

71 பித்தம்

‘கொய்லோ கோழிமுட்டை!’ என்று கத்தியபடியே கட்டம் போட்ட சட்டையும் காக்கி பேண்டுமாக வினோதமாய் நடந்து வந்த உயரமான நடுத்தர வயதைக் கடந்த நரைத்த தலை ஆள் டிஓஎஸ் ஹனுமந்த ராவ் முன்னால் நின்று டேபிளின் மீது இரண்டு கைகளையும் ஊன்றிக்கொண்டபடி, ‘ஐ யாம் சிப்பாய் ராஜகோபால், ரிலீவ்டு ஃப்ரம் ஹெட் குவார்டர்ஸ் ரிப்போர்ட்டிங் சார்’ என்றார்.

‘வெல்கம் வெல்கம். என்ன ராஜகோபால் எப்படி இருக்கீங்க’ என்றார் டிஓஎஸ்.

‘வெரி ஃபைன் சார்’

கொய்லோ கோழிமுட்டை என்று அழைக்கப்பட்டது தாம்தான் என்பதைப்போல சொட்டத்தலை குட்டையன் ஹிஹிஹி என இளித்தவண்ணம் ‘என்ன ராஜகோபால் தண்ணியெல்லாம் நிப்பாட்டியாச்சா இப்பமும் உண்டா’ என்றபடி ஸ்டோர் ரூமிலிருந்து வெளிப்பட்டு டிஓஎஸ்ஸிடம் போனார்.

‘தண்ணி மட்டும் போடலைனா ராஜகோபால் மாதிரி தங்கமான ஆளைப் பாக்கமுடியாது சார்’ என்றார் சிரிப்பில் வாக்கியத்தின் இறுதியை முழுங்கியபடி.

‘யோவ் சிலோன் பைலா. உன் புத்திய காட்டற பாத்தியா. தண்ணியடிக்கிறவன்னு நைஸா டிஓஎஸ் கிட்ட போட்டுக் குடுக்கறியா. சிலோன்ல இருந்து உன்னைத் தொறத்திவிட்டு நீ இங்க ஓடியாறதுக்கு முன்னால இருந்தே அவருக்கு இந்த ராஜகோபாலைத் தெரியும். எல்டிசியா அவர் கூட வேலை பாத்திருக்கேன் ஆம் ஐ கரெக்ட் சார்.’

‘சரி சரி ராஜகோபால். நம்ம ஸேவியர்தானே போகட்டும் விடுங்க.’

‘உங்களுக்காக விடறேன். கொய்லோ கோழிமுட்டை ஊடுபோய் சேராது. வழியிலையே உடைஞ்சிடும்னு சொல்லிவைங்க. ஸ்டோர் பாக்கறது என்ன போர்டு சேர்மன் போஸ்ட்டுனு நெனைப்பா இவனுக்கு. மை ஒய்ஃப் ஈஸ் டிஓஎஸ். யு நோ’ என்று ஹனுமந்த ராவுக்குத் தெரியாத புதிய தகவலைச் சொல்வதைப்போல செக்‌ஷனுக்கே கேட்க உரக்கக் கத்திவிட்டு, கோபித்துக்கொண்டு போவதைப்போல மிதப்பது மாதிரி கைகளைப் பக்கவாட்டில் வீசிக்கொண்டு, ‘ஐ யாம் எக்ஸ் ஏஃபோர்ஸ்’ என்று அப்படியே திரும்பிப் போனார்.

ஸேவியர் ஆண்டணி கருணாகரன் இவனிடம் வந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!