20. கைராசி
ஏசிய பாத்துட்ட போல என்று கண் சிமிட்டியபடி சிரித்தான் சுகுமாரன்.
கம்மனாட்டி. லவ் டே க பால் என்று அவனை மனதிற்குள் திட்டிக்கொண்டான்.
தப்பில்லப்பா வயசுலையும் சரி பதவிலையும் சரி நம்பளவிடப் பெரியவங்க கிட்டக் கொஞ்சம் விட்டுக் குடுத்துப் போறதுல நாம ஒண்ணியும் கொறஞ்சு போயிர மாட்டோம். என்ன சார் நான் சொல்றது என்றான் புகையிலை முகத்துடன் உமென்றிருந்த ஓஎஸ்ஸிடம்.
உள்ளே போய் நின்று காலைக் காட்டி, ஏசி அற்பனைப் பெரிய மனிதனாக்கிவிட்டதைக் கெட்ட கனவாக எண்ணி மறந்துவிடவே நினைத்தான். ஆனால், அதை விடுவேனா என்கிறான் இந்தக் கம்மனாட்டி. இவன் மட்டும் என்றில்லை. ஆபீஸே இப்படித்தான் இருக்கிறது.
இவன் ரங்கன் துரைராஜை எப்படிப் பிடிப்பது என்கிற யோசனையில் கக்கூசில் குந்தியிருந்தால், வெளியே இருவர் பேசிக்கொண்டிருப்பது தன்னைப் பற்றித்தான் என்பதே கொஞ்ச நேரம் கழித்துதான் பிடிபட்டது.
ஜிப்பாவோட திரியிற புதுப் பையனைத்தான சொல்றே.
அவனேதான்.
Add Comment