108. முதல் தேர்தல் திருவிழா
அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்தியாவில் ஜனநாயகக் குழந்தை தன் முதலடியை எடுத்து வைத்தது.
ஆம்! 1949-இல் ஒரு நபர் கொண்ட அமைப்பாக உருவாகியிருந்த இந்தியத் தேர்தல் ஆணையம் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக பாராளுமன்றத்துக்கும், மாநிலச் சட்ட மன்றங்களுக்கும் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியது. தேர்தல் ஆணையம் துவங்கப்பட்ட நாளான 25 ஜனவரி (1950) தான் தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
2024-இல், ஏப்ரல் பிற்பகுதியில் துவங்கி மே கடைசி வரை ஏழு கட்டங்களாக நாடு முழுக்கப் பொதுத் தேர்தல் நடைபெற்றது குறித்து தேர்தல் நடத்த இத்தனை காலம் தேவையா என்று விமர்சனம் எழுந்தது. ஆனால், நம் நாட்டின் முதலாவது பொதுத் தேர்தல் 1951 அக்டோபர் மாதக் கடைசியில் தொடங்கி 1952 பிப்ரவரி வரை நிதானமாக 68 கட்டங்களாக நடந்தது.
Add Comment