192. பிரதமர் யார்?
தொகுதிக்குள் காலடி வைக்காமல் சிறையில் இருந்தபடியே பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஃபெர்னாண்டஸ், மொரார்ஜி அமைச்சரவையில் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆனார்.
ஆனால் அவரோடு சேர்த்து பரோடா வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது சிநேகிதியும், நடிகையுமான சினேகலதா ரெட்டி கதை பரிதாபமானது.
சினேகலதா ரெட்டி, தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் நடித்தவர். மேடை நாடக நடிகையும் கூட. பட்டாபிராம ரெட்டி என்ற அவரது கணவர் ஒரு கவிஞர், திரைப்பட இயக்குனர்.
கன்னட எழுத்தாளர் யு.ஆர். ஆனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா கதையை சினேகலதா ரெட்டி நடிக்க, பட்டாபிராம ரெட்டி இயக்கினார். அதன் மூலம் பெயரும் புகழும் பெற்றார்.
ரெட்டி தம்பதியர் இருவரும் சமூகச் செயல்பாட்டாளர்கள்; சோஷலிஸ்ட் தலைவர் ராம் மனோகர் லோஹியாவின் அணுக்கத் தொண்டர்கள். அதன் காரணமாக ஜார்ஜ் ஃஃபெர்னாண்டஸுக்கு நெருக்கமானார்கள்.














Add Comment