104. தர்மசங்கடம்
சாலையில் நடந்து செல்லும் ஒரு முஸ்லிமுடன் சிலர் சண்டையிட்டு, ‘பாகிஸ்தானுக்கு ஓடு’ என்கிறார்கள். சிலர் அந்த முஸ்லிமின் கன்னத்தில் அறைகிறார்கள் அல்லது அவரின் தாடியைப் பிடித்து இழுக்கிறார்கள். அதேபோல், முஸ்லிம் பெண்கள் தெருக்களில் நடந்து செல்லும்போது, அவர்களைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகள் உதிர்க்கப்படுகின்றன.
இது போன்ற தகவல்களை எல்லாம் கேட்டபோது, பிரதமர் நேரு பெரும் அதிர்ச்சிக்குள்ளானார். பிரிவினைக்குப் பின் இந்தியாவிலேயே தங்க முடிவெடுத்த முஸ்லிம்களை நோக்கி வீசப்படும் நெருப்பு வார்த்தைகள் ‘நீங்கள் பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்’ என்பதுதான் என வேதனையோடு கூறினார்.
தொடர்ந்து, அயோத்தியில் சகஜ நிலைமை திரும்பவும், அயோத்திப் பிரச்னையின் தாக்கம் உத்தரப் பிரதேசத்தின் மற்ற பகுதிகளுக்கோ, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கோ பரவாமல் இருக்கவும் நேரு தனி கவனம் செலுத்தினார்.
Add Comment