‘பாகிஸ்தான் பிரதமரே! உமக்கு வெட்கமாய் இல்லை.? ஏன் நீர் சர்வதேசமெங்கும் திருவோடு ஏந்தித் திரிகிறீர்.? ஒரு கையில் குர் ஆனையும், மறு கையில் அணு ஆயுதச் சூட்கேஸையும் எடுத்துக் கொள். உன் கெபினட்டிற்கும் இதையே செய்யச் சொல். பிளைட் பிடித்து அப்படியே ஸ்வீடனுக்குப் போ. ‘காசு மட்டும் தராவிட்டால் கதை கந்தல்’ என்று சொல்லிப் பாரு. அத்தனை உலக நாடுகளின் தலைவர்களும் எம் தேசத்தின் காலடியில் தவம் கிடப்பார்கள்’.
இதைப் படித்தீர்களா?
நிச்சயமாகவே அவன் ஒரு சாமானிய மனிதனல்லன். அதில் எங்கள் யாருக்கும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் எந்த விபரீதத்துக்கும் இதுவரை அவன் காரணமாக இருந்ததில்லை.
கடமை என்ற சொல்லில் அனைத்தையும் நியாயத்தின் வட்டத்துக்குள் கொண்டு நிறுத்திவிட முடியும்தான். ஆனால் அதன் உள்ளோடிய கள்ளத்தனத்தை விழிப்புடன் கவனித்தேன்.















Add Comment