ஒரு தேர்தல் எப்படி நடக்கக் கூடாதோ, கன கச்சிதமாக அப்படியே பாகிஸ்தானில் நடந்து முடிந்தது. பிப்ரவரி 8 அன்று தேர்தல். அதற்கு முதல் நாள் இரண்டு இடங்களில் கலவரம். சுமார ஐம்பது பேர் உயிரிழந்தார்கள்.
எனவே நாடு முழுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. லட்சக் கணக்கான இராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லைகள் தேர்தல் அன்று முற்றிலும் மூடப்பட்டன. இருந்தாலும் ஐம்பத்தாறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன. இருபத்தெட்டு பேர் உயிரிழந்தார்கள். அதில் இரண்டு குழந்தைகளும் அடக்கம்.
Add Comment