பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரப் பகுதியில் இயங்கும் தீவிரவாத இயக்கங்களுக்கு முன்பெல்லாம் இளைஞர்கள் தன்னிச்சையாக வந்து சேர்வார்கள். அந்தளவுக்கு மிக இளம் வயதிலேயே அவர்களுக்கு மதரசாக்களில் மூளைச் சலவை செய்து வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இப்போது சில ஆண்டுகளாக, எவ்வளவு உந்தித் தள்ளினாலும் யாரும் இயக்கங்களுக்குப் போக விரும்புவதில்லை. இளைஞர்கள் படிப்பதிலும் மேற்படிப்புக்கு வெளிநாடு செல்வதிலும் அங்கே ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். முடிந்தால் ஏதாவது வேலை பெற்று வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிடவே கனவு காண்கிறார்கள். போராளி வாழ்க்கை பேஜார் என்பது இந்தத் தலைமுறையினருக்குத் தெரிந்துவிட்டிருக்கிறது.
விளைவு? பாகிஸ்தானின் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. இயக்கங்களுக்கு ஆள் கடத்தும் திருப்பணியைக் கையில் எடுத்திருக்கிறது.
Add Comment