பெரிய எழுத்துகளில் ‘நமது உலகம் நூலகம்’ என்ற வாசகம் நம்மை வரவேற்கிறது. இருண்ட வளாகம், சில விளக்குகளால் ஒளியூட்டப்பட்டிருந்தது. அதிலும் சில சரியாக எரியவில்லை. நாம் சுற்றித் திரிந்த நேரம் முழுதும் அணைந்து அணைந்து எரிந்துகொண்டிருந்தன. ஓடாத ஃபேன்கள் சில. போடாத ஃபேன்கள் சில. மின் சிக்கனம் அவசியம்தான். சந்தேகமில்லை.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகம் அறுபதாண்டுக் காலப் பழமை வாய்ந்தது. உள்ளே உள்ள புத்தகங்கள் முதல் மேசை, நாற்காலிகள், இதர பொருள்கள் வரை அனைத்துமே அப்பழமைக்கு சாட்சி சொல்பவை. ஆனால் மேசைகளின் எதிர்ப்புறத்தில் திறந்த தடுப்புகள் அமைத்திருக்கிறார்கள். எங்கும் பார்த்திராத வித்தியாசம். மேசைக்கு ஏனிந்த அமைப்பு என்று பொருள் விளங்கவேயில்லை. பிற்காலத்தில் மைக்கா ஒட்டி செய்யப்பட்ட மேசைகளும் அதே பாணியிலிருந்தன. முன்பு பணியாளர்களுக்கானதாக இருந்திருக்கலாம். இப்போது வாசகர்களுக்கானதாக மாறியிருக்கலாம் என்ற ஊகத்தோடு மேஜையை விட்டுச் சிந்தை நகர்ந்தது.
Add Comment