Home » காஸா: பசிப் படுகொலை
உலகம்

காஸா: பசிப் படுகொலை

உதவி ட்ரக்குகளில் உணவு வாங்குவதற்குக் கூடிய பாலஸ்தீனிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டோரைக் கொன்றிருக்கிறது இஸ்ரேல் படை. வடக்கு காஸா வரை உதவி ட்ரக்குகள் வருவதில்லை. காஸாவின் உள்ளே உதவிகளைக் கொண்டு சேர்ப்பதற்கு, மனித உரிமை ஆர்வலர்கள் வாதப் போர் நடத்த வேண்டியிருக்கிறது. சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு 18 ட்ரக்குகள் உணவுப் பொருள்களுடன் நபுல்ஸி பகுதிக்கு வந்ததும் உணவைப் பெறக் கூடினர் பாலஸ்தீனியர்கள். சாப்பிட ஏதாவது கிடைக்கும் எனச் சென்ற காஸா மக்களுக்குக் கிடைத்தது சாவுதான்.

கடந்த வியாழக்கிழமை பிப்ரவரி 29-ஆம் தேதி நடந்தது இந்தச் சம்பவம். உணவு ட்ரக்குகளை நோக்கித் திரளான மக்கள் கூடி உணவைப் பெற முயலும்போது இஸ்ரேல் படை துப்பாக்கிச் சூடு நடத்தியது. டாங்கிகள், ட்ரோன்கள் தாக்குதலும் தொடங்கியது. மக்கள் பலர் மடிந்து வீழ்ந்தனர். எப்படியாவது உணவைப் பெற வேண்டும் என மக்கள் முட்டி மோதிக் கொண்டிருக்க…. குண்டுவீச்சுக்குப் பயந்து தங்கள் உயிரைக் காப்பாற்ற ட்ரக் ட்ரைவர்கள் வண்டியைச் செலுத்த, அடியில் மாட்டி மேலும் சிலர் உயிரிழந்தனர். குண்டு வீச்சினால் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும்போதும் மக்கள் சிதறிக் கிடந்த உணவுப் பொருளைப் பாய்ந்து எடுத்துச் சென்றனர். கிடைக்காதவர்கள் பிணங்களையும் அடிபட்டவர்களையும் சுமந்து சென்றனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!