கடந்த மே 19-ஆம் தேதி இஸ்ரேலியர்கள் தமது கொடி நாளைக் (FLAG DAY) கொண்டாடினார்கள். அதாவது 1948-ல் இஸ்ரேலின் குடிமக்களாக அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள்.
ஜியோனிஸ்ட்டுகளும், அடிப்படைவாதக் கும்பலும், இளைஞர்களும் இஸ்ரேலியக் கொடியை ஏந்தி, “அரபு மக்களுக்கு அழிவு வரட்டும்”, “பாலஸ்தீனர்கள் இல்லாத நாட்டை உருவாக்குவோம்” என்று கோஷங்கள் போட்டுக் கொண்டு ஊர்வலம் சென்றார்கள். இவை எல்லாம் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் மேற்குக் கரை (ஜோர்டன் நதிதீரம்), காஸா பகுதிகளில் மட்டுமே ஒலித்தன. தவிர, இஸ்ரேலியர்களின் கொண்டாட்டம் என்றால் கேக்கா வெட்டுவார்கள்?
முப்பத்து மூன்று பாலஸ்தீன இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இது என்ன அராஜகம் என்று மக்கள் பொங்கினால் மேலும் முப்பது நாற்பது உடல்கள் மண்ணில் விழும்.
Add Comment