13. ஏற்றங்கள், இறக்கங்கள்
எங்கள் வீட்டுக்கருகில் சில ஆடைத் தொழிற்சாலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான பெண்கள் தையல் கலைஞர்களாகப் பணிபுரிகிறார்கள்.
இந்தத் தையல்களுடைய தையல் வேலை நேரம் காலை ஒன்பது மணிக்குத் தொடங்கி, மாலை ஆறு மணிக்கு நிறைவடையும். அதன்பிறகு, அவர்கள் பரபரவென்று வீட்டுக்குச் சென்று இரவுச் சமையல் வேலைகளைத் தொடங்கவேண்டும்.
அதனால், சுமார் ஐந்தரை மணியளவில் இந்தத் தொழிற்சாலைகளுக்கு வெளியில் வரிசையாகச் சில காய்கறிக் கடைகள் அமைக்கப்படும். அந்தக் கடைகளில் தராசெல்லாம் கிடையாது. ஒவ்வொரு காயையும் ஏற்கெனவே எடைபோட்டுப் பிளாஸ்டிக் பைகளில் கட்டிவைத்திருப்பார்கள். எதை எடுத்தாலும் பத்து ரூபாய்.
சரியாக ஆறு மணிக்குத் தொழிற்சாலைக் கதவுகள் திறக்கப்படும். பெண்கள் கும்பலாக வெளியில் வருவார்கள், இந்தக் கடைகளில் தங்களுக்குப் பிடித்த காய்கறிகள் ஒன்றிரண்டை எடுத்துப் பையில் போட்டுக்கொள்வார்கள். மூன்று பொட்டலம் என்றால் முப்பது ரூபாய், இரண்டு பொட்டலம் என்றால் இருபது ரூபாய், ஒரே ஒரு பொட்டலம்தான் என்றால் பத்து ரூபாய்… காசை எண்ணிக் கொடுத்துவிட்டு வீட்டை நோக்கி ஓடுவார்கள்.
Add Comment