14. ஒழுங்கான பண ஓட்டம்
சில ஆண்டுகளுக்குமுன் நாங்கள் குற்றாலம் சென்றிருந்தோம், அங்கு ஒரு குறிப்பிட்ட விடுதியை விரும்பித் தேர்ந்தெடுத்துத் தங்கினோம்.
மற்ற பல விடுதிகளை விட்டுவிட்டு நாங்கள் இந்த விடுதியைத் தேர்ந்தெடுத்தது ஏனென்றால், அங்கு ‘Private Waterfall’, அதாவது, அந்த விடுதி எல்லைக்குள் அங்கு தங்குபவர்களுக்குமட்டுமான தனியார் அருவி ஒன்று இருந்தது. அதனால், கூட்ட நெரிசலில்லாமல் மகிழ்ச்சியாக நெடுநேரம் குளிக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம்.
நாங்கள் எண்ணியதுபோல் அந்தத் தனியார் அருவி மிக அழகாக இருந்தது. அதைவிட முக்கியம், ஆளில்லாமல் காற்று வாங்கிக்கொண்டு இருந்தது. அதனால், நாங்கள் சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கு ஆசையாகக் குளித்தோம்.
Add Comment