Home » பணம் படைக்கும் கலை – 23
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 23

கரகாட்டக்காரன்: வாழைப்பழத் தத்துவம்

23. ஒர்ரூவாக்கு ரெண்டு பழம்

கரகாட்டக்காரன் திரைப்படம் நினைவிருக்கிறதா? படத்தை விடுங்கள், அதில் வருகிற ‘வாழைப்பழ’ நகைச்சுவை நினைவிருக்கிறதா?

கவுண்டமணி செந்திலிடம் ஒரு ரூபாயைக் கொடுத்து இரண்டு வாழைப்பழம் வாங்கிவரச் சொல்வார். செந்திலும் கடைக்குச் சென்று இரண்டு வாழைப்பழங்களை வாங்குவார். ஆனால், அதில் ஒரு வாழைப்பழத்தை அவரே தின்றுவிட்டு, மீதமுள்ள இன்னொரு வாழைப்பழத்தைமட்டும் கவுண்டமணியிடம் கொடுப்பார். ‘இன்னொரு பழம் எங்கே?’ என்று கவுண்டமணி கேட்க, ‘அந்த இன்னொரு பழம்தான் இது’ என்று அடாவடி செய்வார்.

நகைச்சுவை இருக்கட்டும். நாம் இதில் வருகிற வாழைப்பழத்தின் விலையை மட்டும் கவனிப்போம்: இரண்டு பழம் ஒரு ரூபாய், ஆக, ஒரு பழத்தின் விலை அரை ரூபாய், ஐம்பது பைசா.

இன்றைக்கு நாம் கடைக்குப் போய் ஐம்பது பைசா கொடுத்தால் நமக்கு ஒரு வாழைப்பழம் கிடைக்காது. ஏனெனில், இப்போது அதன் விலை ஐந்து ரூபாய், அல்லது, அதைவிட அதிகம்.

ஐம்பது பைசா வாழைப்பழம் எப்படி ஐந்து ரூபாய் ஆனது? அதன் விலை பத்து மடங்காக உயர்ந்தது ஏன்?

கரகாட்டக்காரன் திரைப்படம் 1989ல் வெளிவந்தது. அதாவது, 35 ஆண்டுகளுக்குமுன்னால் ஒரு வாழைப்பழத்தின் விலை ஐம்பது பைசா. இப்போது 2024ல் அது பத்து மடங்காகிவிட்டது.

இந்த விலையேற்றம் ஒரே நாளில் நடந்திருக்காது. ஐம்பது பைசா என்பது சில நாட்களில் எழுபத்தைந்து பைசா என மாறியிருக்கும், அங்கிருந்து ஒரு ரூபாய், ஒன்றரை ரூபாய் என்று படிப்படியாக உயர்ந்து இப்போது ஐந்து ரூபாய், ஆறு ரூபாய்க்கு வந்துள்ளது. முப்பத்தைந்து ஆண்டுகளில் மிக மெதுவாக நடந்த விலையேற்றம் இது. அதனால், யாரும் இதைக் கவனித்திருக்கமாட்டார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்