Home » பணம் படைக்கும் கலை – 26
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 26

26. படைத்தலைவர் ஆவோம்

அரை லிட்டர் பால் பாக்கெட்டின் விலை ரூ 23. அதையே ஒரு லிட்டர் பாக்கெட்டாக வாங்கினால் 23 + 23 = ரூ. 46 இல்லை, ரூ. 45தான்.

இதன் பொருள், ஒருவேளை உங்கள் வீட்டுக்கு நாள்தோறும் ஒரு லிட்டர் பால் தேவைப்படுகிறது என்றால், அதை இரண்டு அரை லிட்டர் பாக்கெட்களாக வாங்குவதற்குப்பதிலாக ஒரு லிட்டர் பாக்கெட்டாக வாங்கிக்கொண்டால் உங்களுக்கு ஒரு ரூபாய் மிச்சமாகும். இதை ஆண்டுமுழுக்கச் செய்தால் ரூ. 365 சேமிக்கலாம்.

உண்மைதான். ஆனால், இது வெறும் விலைக் கணக்குதான். அந்தச் சேமிப்பினால் நமக்கு ஏதேனும் இழப்பு உண்டா என்பதையும் நாம் யோசிக்கவேண்டும்.

நாள்தோறும் இரண்டு அரை லிட்டர் பால் பாக்கெட்களை வாங்குகிறவர்கள் காலையில் ஒரு பாக்கெட்டைமட்டும் பிரித்துக் காய்ச்சுவார்கள், இன்னொரு பாக்கெட்டைக் குளிர்ப்பெட்டியில் வைப்பார்கள். பின்னர் மாலையில் அந்த இன்னொரு பாக்கெட்டைக் காய்ச்சிப் பயன்படுத்துவார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்