35. கடன் மறுகட்டமைப்பு
ஒருவருடைய கடன் சுமை எல்லை மீறினால் என்ன ஆகும்?
அதாவது, அவர் வாங்கியிருக்கும் கடன்களுக்காக மாதந்தோறும் செலுத்தவேண்டிய ஒட்டுமொத்தத் தவணைத் தொகை, அவருடைய மாத வருமானத்தைவிடக் கூடுதலாக இருந்தால்? இதற்குமேல் அவருடைய வருமானத்தை உயர்த்துவதற்கு எந்த வழியும் தென்படாவிட்டால்?
இந்தச் சூழ்நிலையில் அவர் கண்டிப்பாக ஓரிரு கடன்களையாவது ஒழுங்காகச் செலுத்த இயலாமல் போகும். அதற்கு வட்டி, அபராதம் என்று எல்லாமாகச் சேர்ந்து அவருடைய சுமை இன்னும் கூடும், அவருடைய வாழ்க்கை மேலும் சிக்கலாகும்.
இன்னொருபக்கம், அவருக்குக் கடன் கொடுத்த வங்கிக்கும் இதனால் இழப்புதான். கடன் வாங்கியவர்களிடமிருந்து அசலும் வட்டியும் ஒழுங்காகத் திரும்பி வராதபோது, அது வங்கிக்கும் சுமையாகிவிடுகிறது.
ஆங்கிலத்தில் இதுபோன்ற சூழல்களை Lose:Lose என்பார்கள். அதாவது, இருதரப்புக்கும் இழப்பு, யாருக்கும் நன்மையில்லை.
Add Comment