Home » பணம் படைக்கும் கலை – 39
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 39

39. ஆபத்து Vs பலன்கள்

‘கடலைவிடத் துறைமுகம்தான் பாதுகாப்பானது. ஆனால், கப்பல் துறைமுகத்தில் தங்குவதற்காகக் கட்டப்படவில்லை’ என்று ஓர் ஆங்கிலப் பொன்மொழி உண்டு. இதன் பொருள், ஒரு செயலைச் செய்வதற்குமுன் அதில் இருக்கக்கூடிய ஆபத்துகளைமட்டும் பார்க்கக்கூடாது. அதைச் செய்வதன்மூலம் வரக்கூடிய பலன்களையும் பார்த்து, இரண்டையும் ஒப்பிட்டுத்தான் தீர்மானிக்கவேண்டும்.

இதுவொன்றும் பெரிய அப்பாடக்கர் சூத்திரமெல்லாம் இல்லை. இதை நாம் நாள்தோறும் மிக இயல்பாக, சிறிதும் சிந்திக்காமல் செய்துகொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு நம் மூளையில் அழுத்தமாகப் பதிவாகியிருக்கிற செயல்பாடு இது.

எடுத்துக்காட்டாக, ஒரு சாலையைக் கடப்பதற்குமுன் இருபுறமும் பார்க்கிறோம், எந்த வண்டியும் தென்படவில்லை என்றால் சாலையைக் கடக்கிறோம். ஒருவேளை, வண்டிகள் தென்பட்டால், அவை எத்தனைத் தொலைவில் உள்ளன, எவ்வளவு விரைவாக வருகின்றன, அந்தச் சாலையின் அகலம் என்ன, நாம் அதைக் கடப்பதற்கு எவ்வளவு நேரமாகும், நம் கையில் இருக்கக்கூடிய பெட்டி, கனமான பை போன்றவை நம் விரைவை எந்த அளவுக்குக் குறைக்கும் என்றெல்லாம் சிந்திக்கிறோம். அதன் அடிப்படையில் சரியான, பாதுகாப்பான நேரத்தில் சாலையைக் கடக்கிறோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!