Home » பணம் படைக்கும் கலை – 1
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 1

பணப் பார்வை

தொண்ணூறுகளில் பெரும் புகழ் பெற்ற காதல் திரைப்படம் அது. ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் ஒரு புயலைப்போல் அள்ளிக்கொண்டது, குறிப்பாக, இளைஞர்களை.

அப்போது கல்லூரி மாணவர்களாக இருந்த நானும் என்னுடைய நண்பர்களும் அந்தப் படத்தைப் பலமுறை விரும்பிப் பார்த்தோம், அதில் இடம்பெற்ற காதல் வழியும் பாடல்களையும் வசனங்களையும் அடிக்கடி முணுமுணுத்தோம், கண்களில் ரோஜாப்பூ மின்னத் திரிந்தோம்.

ஆனால், இதெல்லாம் நடந்து கால் நூற்றாண்டுக்குப்பிறகு இன்றைக்கு நான் அந்தப் படத்தைப்பற்றி எண்ணும்போது, அதன் நாயகனோ நாயகியோ என் நினைவுக்கு வரவில்லை, அவர்களுடைய காவியக் காதலைத் தாண்டி வேறொரு காட்சிதான் என் மனத்தில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.

அந்தக் காட்சியில் இரண்டு பெண்மணிகள் ஒரு புடைவைக் கடைக்குச் செல்வார்கள். ஒருவர் 635 ரூபாய்க்குப் புடைவை வாங்குவார். இன்னொருவர் 800 ரூபாய்க்குப் புடைவை வாங்குவார். இருவரும் கடைக்காரரிடம் தள்ளுபடி கேட்பார்கள். ஆனால், கடைக்காரர் அதை மறுத்துவிடுவார். ஏனெனில், அவருடைய கடையில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் புடைவை வாங்கினால்தான் தள்ளுபடி கிடைக்கும்.

இதைப் பார்த்த நாயகன் அந்த இரண்டு புடைவைகளையும் தனித்தனியாக வாங்காமல், இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து பில் போடச் சொல்வான். இப்போது மொத்த பில் தொகை ஆயிரத்தைத் தாண்டிவிடுவதால், இரண்டு புடைவைகளுக்கும் தள்ளுபடி கிடைத்துவிடும்.

அந்தப் படத்தில் இந்தக் காட்சி சில நிமிடங்கள்தான் வரும். கதையில் அது ஒரு பெரிய திருப்புமுனை என்றும் சொல்லமுடியாது. ஆனாலும் அது என் மனத்தில் நன்றாகப் பதிந்துவிட்டது. ஏனெனில், கிட்டத்தட்ட இதேபோன்ற காட்சிகளை வேறுவிதத்தில், வேறு வடிவங்களில் நான் பலமுறை பார்த்திருக்கிறேன், வியந்திருக்கிறேன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • sureshbabu s says:

    பூவே உனக்காக என்று முதல்பாராவில் புதிர்போட்டு கட்டுரைக்குள் நுழைத்து பணம் சம்பாதிக்கும் கலையை சுவாரஸ்யமாக கற்றுத் தரும் எழுத்தாளருக்குப் பாராட்டுக்கள்.

  • shanmugavel vaithiyanathan says:

    IQ போல நிதி அறிவும் வேண்டும் என அசத்தலாக ஆரம்பித்துள்ளது பணம் படைக்கும் கலை. அருமையான ஆரம்பம் ..!

  • Parisal Krishna says:

    அடுத்தடுத்த பகுதிகளுக்கு ஆவலுடன் வெய்ட்டிங்.

  • Rathnam Sainathan says:

    An excellent starting sir, waiting for the issues to come out. It is really nice to read you in Madras Paper.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!