எத்தனை முறை முயன்றாலும், ஒரு சிலருக்கு அன்றாடப் பணிகளை முழுதும் முடித்த அனுபவம் இருப்பதேயில்லை. இன்றைய அவசரத் தொழில்நுட்பக் காலத்தில், ஒரு சிலரால் எந்தப் பதட்டமும் அழுத்தமும் இல்லாமல் எதையும் அமைதியாக, சீராகச் செய்து முடிக்க முடிவதில்லை. எல்லோருக்குமே அந்த 24 மணி நேரம்தான் இருக்கிறது. ஒரு சிலர் மட்டும் அதை ஆக்கபூர்வமாகவும் திறமையாகவும் எப்படிப் பயன்படுத்துகிறார்கள்?
ராஜீவ் வெங்கைய்யா என்ற அமெரிக்க அரசின் உயரதிகாரி ஒருவர், பன்றிக் காய்ச்சல் பிரச்சினை விசுவரூபம் எடுத்த காலத்தில் அதனைத் தடுக்கும் அடிப்படைத் திட்டத்தை இரண்டே நாளில் எழுதி முடித்தார். நம்ப முடிகிறதா..? ஏனென்றால் அவருக்குக் கொடுக்கப்பட்ட நேரமே அவ்வளவுதான்.
வெள்ளை மாளிகையில் ஒரு சின்னக் கலந்துரையாடல், பன்றிக் காய்ச்சலைப் பற்றி. அதற்கு நோய்கள் தடுக்கும் குழுவிற்கு (center for disease control) பங்குகொள்ள அழைப்பு வருகிறது. பன்றிக் காய்ச்சலை யாருமே முக்கியத் தொற்றாக கருதாத நேரம், தங்களிடம், உயிரியல் பாதுகாப்புக் குழுவில் ஆராய்ச்சியாளராக வந்திருந்த மருத்துவர் ராஜீவ் வெங்கைய்யாவை அனுப்பி வைக்கிறது CDC. அப்போதைய ஜனாதிபதி புஷ், ‘இந்த காய்ச்சல் வந்தால் தடுக்கும் திட்டம் CDC யிடம் இருக்கிறதா?’ என வினவ, ‘திட்டம் இருக்கிறது, ஆனால் அது சரியானதல்ல’ என்று தெளிவாக உரைக்கிறார் ராஜீவ்.
very practical advises. We follow some, we think of some, and we miss some.. Good one.