Home » கோட்டுக்கு அந்தப் பக்கம்
உலகம்

கோட்டுக்கு அந்தப் பக்கம்

இந்தியாவிடமிருந்து ஆக்கிரமித்து, ஆசாத் காஷ்மீர் என்று பெயரிட்டுத் தன் எல்லையில் இருத்திக்கொண்டாலும், பாகிஸ்தானின் அரசியல்  மையப்புள்ளி அதுவே. கில்கிட்- பல்டிஸ்தானுக்குக் கீழே, தெற்கிலும் மேற்கிலும் பாகிஸ்தானின் பஞ்சாப்பும், கைபர் பக்துன்வாவும் இருக்க, கிழக்கில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் லைன் ஆஃப் கன்ட்ரோலை ஒட்டியிருக்கும் நிலத்துண்டு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர். குத்துமதிப்பாகக் கேரளா மாநிலத்தின் அளவில் மூன்றில் ஒரு பங்கு. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள இந்த 13000 சதுர கிலோமீட்டருக்குச் சற்றே அதிகமான நிலத்தில் சுமார் நாற்பது லட்சம்பேர் வசிக்கிறார்கள்.

முசபராபாத் தலைநகரம். பிரதமர், ஜனாதிபதி, உச்சநீதி மன்றம், உயர்நீதிமன்றம் எல்லாம் தனியாக இருக்கின்றன. பாகிஸ்தானின் மாகாணம் மாதிரிதான், ஆனால் மற்ற பாகிஸ்தான் மாகாணம் போல இப்பகுதி கிடையாது. சொந்தமாக இடைக்கால அரசியலமைப்பும் சட்டமன்றமும் கொண்ட தன்னாட்சிப் பகுதியென (de facto autonomous region) வரையறுக்கப்படுகிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இப்பகுதிக்கென பிரதிநிதி கிடையாது. அதற்கு மாற்றாக காஷ்மீர் விவகாரம் மற்றும் கில்கிட் பல்டிஸ்தான் துறை என்று ஒன்றை அமைச்சரவையில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இத்துறையே இப்பகுதிக்கும் பாகிஸ்தானுக்கும் இருக்கும் தொடர்ப்புப்புள்ளி. பிரிட்டிஷ் காலனியாதிக்கக் காலத்து வெஸ்ட்மினிஸ்டர் சிஸ்டம் போன்றது இது.

ஒரு காலக்கட்டம் வரைக்கும் எப்படியாவது இந்தியப் பகுதி காஷ்மீருடன் இணைந்து தனி நாடு ஆகிடலாம் என்ற எண்ணம் இருந்தது. இப்போது அவையெல்லாம் மங்கிவிட்டன. பாகிஸ்தானுடன் இணைவது அல்லது அதிக அரசியல் உரிமைகளுடன் தன்னாட்சியை வலியுறுத்துவது என்கிற இரண்டு வாய்ப்புகளைத்தான் இம்மக்கள் பரிசீலிக்கிறார்கள். சுயாட்சி பேசுபவர்களை ஆதரிப்பதும் அதே கருத்தை இன்னும் தீவிரமாக நம்பி அரசியல் செய்தால் கைது செய்வதும், தேர்தலில் பங்கு பெற வாய்ப்பு மறுப்பதுமாகக் கடுமை காட்டுகிறது பாகிஸ்தான். சரி, தங்களோடு சேர்த்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!