Home » அதிகாராதிபதி
இலங்கை நிலவரம் உலகம்

அதிகாராதிபதி

முதல் வரிசை: ஜெயவர்த்தன, பிரேமதாச, விஜேதுங்கெ, சந்திரிகா குமாரதுங்க. கீழ் வரிசை: ராஜபக்ச, மைத்ரிபால சிறிசேனா, கோட்டபாய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்கெ

உலகில் வேறெந்த நாட்டு ஜனாதிபதிக்கும் இவ்வளவு அதிகாரங்கள் இருக்காது. இலங்கை ஜனாதிபதி பதவியின் அதிகாரங்கள் எல்லை கடந்தவை.

ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்திரண்டாம் ஆண்டு இலங்கை குடியரசானபோது முதலாவது அரசியல் யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. கவர்னர் ஜெனரலாய் இருந்த வில்லியம் கோபல்லாவ என்பவர் ஜனாதிபதியாகிக் கொண்டார். இப்பதவியானது நடிகர்களுக்கு அவ்வப்போது வழங்கப்படும் கெளரவ டாக்டர் பட்டம் போன்ற ஒன்று. யாதொரு பலனுமில்லை. முழு அதிகாரமும் பாராளுமன்றத்திடம் இருந்தது.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தேழாம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆறில் ஐந்து பங்கு பலத்துடன் ஜே.ஆர் ஜெயவர்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது. இத்தனை பெரும் பலத்துடன் வென்றுவிட்டு சும்மா இருந்தால் எப்படி என்று நினைத்த அவர், தன் அபிமான சட்டத்துறை நிபுணர்களிடம் புதிய அரசியல் யாப்பை எழுதப் பணித்தார். ஒரு வருடத்தில் அதன் பணிகள் நிறைவுற்றன. ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தெட்டாம் ஆண்டு இரண்டாவது அரசியல் யாப்புடன் சகல அதிகாரமும் பொருந்திய ஜனாதிபதி பதவி தேசத்திற்கு அறிமுகமானது. நிறைவேற்று அதிகாரம் பொருந்திய ஜனாதிபதியாக ஜே.ஆர் ஜெயவர்தன முடிசூடிக் கொண்டார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!