நாவல் படித்து ரசித்த பலரும் ஒரு பிடி உப்புடன் தான் முதல்பாகத்தை அணுகினார்கள். இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அத்தடைகள் குறைந்ததும் உண்மை. அதற்குப் பல காரணங்கள் – அதிகம் உறுத்தாத நடிகர் தேர்வு, கதையைத் தொடரப்போவதாகக் கட்டியம் கூறிய திரைக்கதை, இப்படி.
ஆனால் இரண்டாம் பாகம் ஆரம்பம் – குறிப்பாக ஆதித்த கரிகாலன் நந்தினி உறவில் தொடங்கிய விதம் – நன்றாகத்தான் இருந்தது, ஆனால் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையாளர்களை விலக்கத் தொடங்கியது. குறிப்பாகக் குந்தவை, ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், அருள்மொழி எல்லாரும் சூடாமணி விஹாரத்தில் சந்திப்பதாக ஒரு காட்சி வந்தபோதுதான் அந்த விலக்கம் தொடங்குகிறது.
சூடாமணி விஹாரத்தில் அண்ணன் தங்கை தம்பி சந்திக்கக்கூடாதா? சந்திக்கலாம். ஆனால் அதனால் ஆன பயனென்ன? கதையில் அவர்கள் சந்தித்துக்கொள்வதே இல்லை என்பதற்கு அவர்கள் இருக்கும் இடங்களின் தூரமும் அந்த நாளைய போக்குவரத்துக்குறைவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆபத்துதவிகள் சோழர் குலத்தை வேரறுக்கச் சபதம் செய்திருக்கும்போது இடம் மாற்றுதல் அவ்வளவு சுலபமாக இருந்திருக்காது. நினைத்தபோது ஆதித்தன் வரமுடியும் என்றால் பழையாறையில் இருந்து தஞ்சை எவ்வளவு தூரம்? தந்தையைச் சந்திக்க வந்தியத்தேவனைத் தூது ஏன் அனுப்பவேண்டும் – இந்தக் கேள்விகள் எல்லாம் வரத்தொடங்கியிருக்கக்கூடாது – Suspension of disbelief இருந்திருந்தால். ஆனால் யோசிக்க வைத்துவிட்டதே.
கேள்விக்கணைகள் செம! ஆனாலும் சாண்டிலயனும் பாட்டு புத்தக உவமையும் டூ மச்!
விஸ்வநாதன்