பத்திரிகைகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே சிறுகதை, நாவல் போட்டிகள் நடத்தப்படத் தொடங்கிவிட்டன. தங்கக் காசு, வைர மோதிரம், பட்டுப் புடைவைகள், பரிசுக் கூப்பன்கள் எனக் காலத்துக்குத் தக்கவாறு கவர்ந்திழுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வந்திருக்கின்றன. பரிசுகளைத் தாண்டி, புதிதாக எழுத வருபவர்களுக்கு வாய்ப்பளிப்பது, தரமான எழுத்தை அடையாளம் காண்பது, வாசகர்களிடம் பரவலாகக் கொண்டு சேர்ப்பது என இந்தப் போட்டிகள் பல வகையிலும் எழுத்தில் ஆர்வமிருப்பவர்களுக்கு உதவி புரிந்திருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாகப் பதிப்பகங்களும் சிறுகதை, நாவல் போட்டிகளை நடத்தி வருகின்றன. பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரை கணிசமான அளவு தொகையைச் சன்மானமாகவும் அளிக்கின்றன. வெற்றி பெற்ற படைப்புகள் புத்தகங்களாகவும் சிறுகதைத் தொகுப்புகளாகவும் அச்சிடப்படுகின்றன.
இந்தப் புத்தகங்களுக்கு மக்களிடம் பரவலான ஏற்பு இருக்கிறதா? பரிசுக்குரிய கதைகளை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள்? இந்தப் போட்டிகள் நடத்தப்படுவதற்கான முதன்மைக் காரணம் என்ன? பதில்களைத் தேடி சில பதிப்பகங்களையும், போட்டியில் வென்ற எழுத்தாளர்களையும் அணுகினோம்.














Add Comment