Home » சென்னைப் புத்தகக் காட்சி: ஏற்பாடுகளும் எதிர்பார்ப்புகளும்
புத்தகக் காட்சி

சென்னைப் புத்தகக் காட்சி: ஏற்பாடுகளும் எதிர்பார்ப்புகளும்

இம்முறை ஜனவரியில் வருகிறது சென்னை புத்தகக் காட்சி. ஏழாம் தேதி தொடங்கி, பொங்கல் விடுமுறைகளைக் கடந்து பத்தொன்பது வரை நடைபெறவிருக்கிறது.

1977ஆம் ஆண்டு கே.வி. மேத்யூ என்பவரது முன்னெடுப்பால் இருபத்திரண்டு அரங்குகளுடன் தொடங்கப்பட்டது சென்னை புத்தகக் காட்சி. பின்னர் ஒரு வருடம் கூட இடைவெளி விடாமல் தொடர்ந்து நடத்தப்பட்டதால் சென்னையின் கலாசார அடையாளங்களில் ஒன்றாக நிலைபெற்றுவிட்டது. இந்த வருடம் நடக்கவிருப்பது நாற்பத்தொன்பதாவது புத்தகக் காட்சி. பொன்விழாவுக்கு முந்தைய நிகழ்ச்சி.

இந்தப் புத்தகக் காட்சியை நடத்தும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அணி பொறுப்பேற்ற பின்னர் புத்தகக் காட்சிக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கான ஏற்பாடுகள் எவ்விதம் முன்னெடுக்கப்படுகின்றன? பதிப்பகத்தார் என்னென்ன மாற்றங்களையும் வசதிகளையும் எதிர்பார்க்கின்றனர்? இது தொடர்பாகச் சில பதிப்பகத்தாரிடமும், பபாசி செயற்குழு உறுப்பினரிடமும் பேசினோம்.

ஷார்ஜா புத்தகக் காட்சியில் ஐந்து வருடங்களாகத் தொடர்ந்து அரங்குகளை அமைத்துவரும் வானவில் புத்தகாலயத்தின் நிறுவனர் கார்த்திகேயனிடம் பேசினோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!