ஆதி மனிதனின் முதல் பிரச்னை உணவு. பிறகு குளிர், மழை, வெப்பத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், பாதுகாப்பாகத் தூங்கவும் ஓர் இடம். உடை அணியக் கற்றுக் கொண்டதும் சூழலியல் தட்பவெப்பத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் முகமாகத்தான்.
இதில் உள்ள மூன்றில் முதல் இரண்டுக்கு அவன் விலங்குகளோடு போட்டிபோட வேண்டியிருந்தது. தொடக்கத்தில் விலங்குகளும், மனிதனும் ஒன்று, மற்றொன்றுக்கு உணவாகிக் கொண்டிருந்த காலத்தில் உணவுக்கான போட்டி விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் முழு வீச்சில் இருந்திருக்கும்.
உணவின் வரலாறை சொல்லியிருப்பதுடன் உடலின் எந்த பாகத்திற்கு எந்த சத்து தேவை என்பது போன்ற தகவல்களைச் சொல்லி அறிவியல் கட்டுரையாகவும் இருக்கிறது.