அலாரம் இல்லா அதிகாலை
நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழிப்பது யாருக்குத்தான் பிடிக்கும்? அதிகாலை அமைதியைக் கிழித்துக்கொண்டு ஸ்மார்ட்ஃபோன் அலாரம் அலறுவதை விடக் கொடூரமானது வேறு எதுவும் இல்லை. பிடித்த பாடலை அலாரமாக வைத்திருந்தாலும் இதே நிலைதான். மென்மையான ஒலியை வைத்திருந்தாலும் இன்பம் தராது. அது ஒலிக்கும் நொடியில் எரிச்சலைத்தான் தரும். உடனே அதை அணைத்துவிட வேண்டும் என்று தோன்றும். தலையணைக்குள் முகத்தைப் புதைத்துக் கொள்ள வேண்டும் எனத் தோன்றும். மீண்டும் தூங்க வேண்டும் என்ற எண்ணமும் வரும்.
அலாரத்தின் ‘ஸ்னூஸ்’ (Snooze) பட்டனை அழுத்தி அழுத்தி எழுவது தவறு. அது துண்டுதுண்டான தூக்கத்தை ஏற்படுத்தும். ‘தூக்க மயக்கத்தோடு’ (Sleep Inertia) எழுவது உடலுக்கும் மனத்துக்கும் கேடு தரும்.
ஆழ்ந்த உறக்கத்திலிருந்து திடீரென எழுப்பப்படும்போது, அழுத்த ஹார்மோன்கள் எகிறுகின்றன. இதயத் துடிப்பு வேகமாகிறது. எதிர்வினை நேரமும் மந்தமாகிறது. நாள் முழுவதும் ஒருவித மந்தநிலை நீடிக்கிறது. இதையே ஆய்வாளர்கள் ‘தூக்க மயக்கம்’ என்கிறார்கள்.











Add Comment