Home » ரகசியம், பரம ரகசியம் – 7
நாள்தோறும் ரகசியம்

ரகசியம், பரம ரகசியம் – 7

பிள்ளை வளர்ப்பில் நேர மேலாண்மை

சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கும் திட்டமிடுதலைச் சொல்லிக்கொடுத்தல் அவசியம். நேர மேலாண்மை என்பது வளர்ந்த பிறகு கற்றுக்கொள்ளும் ஒன்று அல்ல. அது சிறு வயதிலேயே தொடங்க வேண்டிய பழக்கம். வயதுக்கு ஏற்றபடி பொறுப்புகளை அளிக்கும்போது, குழந்தைகள் இயல்பாகவே இதைக் கற்றுக்கொள்வார்கள்.

மூன்று அல்லது நான்கு வயதுக் குழந்தைகள் தூங்கப் போகும் முன், அவர்கள் மறுநாள் அணிந்து கொள்ளும் ஆடைகளைத் தெரிவு செய்ய வைக்கலாம். சின்னப் புத்தகங்களை அவர்களுடன் சேர்ந்து வாய்விட்டுப் படிக்கலாம். குறித்த நேரத்துக்கு உறங்கச் செல்ல வேண்டும். விளையாட, குறிப்பிட்ட நேரம் கொடுக்க வேண்டும். இந்தச் சின்னச் சின்னப் பழக்கங்கள் பெரிய அடித்தளத்தை அமைக்கும்.

காப்பகங்களில் கூட எல்லாவற்றுக்கும் ஒரு கால அளவு நிர்ணயித்திருப்பார்கள். இதைப் பெற்றோர்களும் கவனித்திருக்கலாம். சாப்பிடுவதற்கு ஒரு நேரம், விளையாடுவதற்கு ஒரு நேரம், படிப்பதற்கு ஒரு நேரம் என ஒழுங்காக வகுத்திருப்பார்கள். அது நல்ல பழக்கத்தைக் கொண்டு வரும். வீட்டிலும் இதே போன்ற ஒழுங்கைப் பின்பற்றலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!