Home » ரகசியம், பரம ரகசியம் – 24
நாள்தோறும் • ரகசியம்

ரகசியம், பரம ரகசியம் – 24

நன்றே சூழ்க

நமக்கே நமக்கான நேரம் மிகக் குறைவு. வேலை, வீடு, பயணம் என நாள் ஓடிவிடுகிறது. மிஞ்சுவது ஒரு மணிநேரமோ அரை மணி நேரமோதான். அந்த நேரம் நம்மை ஆசுவாசப்படுத்துவதாக அமைய வேண்டும். மறுநாளுக்கான சக்தியைத் தர வேண்டும். அதை எவ்வாறாகச் செலவிடுகிறோம் என்பது முக்கியம்.

கைப்பேசியை எடுத்தால் சின்னச் சின்னக் காணொளிகள் வரிசையாக வருகின்றன. ஒன்று முடிந்ததும் அடுத்தது தானாகத் தொடங்குகிறது. அந்த நொடியில் சிரிக்கிறோம். ஆனால் மனம் அமைதி அடைவதில்லை. நிறைவும் கிடைப்பதில்லை. ஒரு மணிநேரம் போன பிறகு எதைப் பார்த்தோம் என்றே நினைவில்லை. கண்ணும் மனமும் மேலும் சோர்ந்திருக்கும். பலரும் பார்க்கிறார்கள் என்பதற்காக நாமும் பார்க்க வேண்டியதில்லை.

நாம் பார்ப்பதும் கேட்பதும் மனதில் தங்குகின்றன. உணவு உடலுக்குள் போவது போல இவை மனதுக்குள் போகின்றன. நல்ல உணவு உடலுக்குத் தெம்பு தருகிறது. நல்ல காட்சியும் நல்ல சொல்லும் மனத்துக்குத் தெம்பு தருகின்றன. சண்டையையும் குறையையும் கேட்டுக்கொண்டே இருந்தால் மனம் கனக்கும். நல்லதைக் கேட்டால் மனம் லேசாகும். லேசான மனம்தான் புத்துணர்வுடன் வேலை செய்யும். அதனால் நம்மைச் சுற்றி எதை வைக்கிறோம் என்பதில் கவனம் தேவை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!