Home » காசு, கார்டு, கடவுள்
ஆன்மிகம்

காசு, கார்டு, கடவுள்

ஸ்ரீராகவேந்திரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில், மந்த்ராலயம். தமிழகத்தின் முக்கியமான நகரங்களான சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்றவற்றிலிருந்து மந்த்ராலயத்தை அடையப் பன்னிரண்டிலிருந்து பதினேழு மணி நேரம் வரை ஆகும். நேரடியாகப் போகும் ரயில்கள் குறைவாக இருப்பதால் மும்பை செல்லும் ரயில்களை நம்பியே இருக்க வேண்டிய சூழல். மந்த்ராலயம் மட்டும் செல்லும் சுற்றுலா நிறுவனங்கள் குறைவு. அகோபிலம், அல்லது சீரடி என்று ஓரிரண்டை முடிச்சுப் போட்டுச் செலவை இழுத்து விடுவார்கள். இந்த இடத்தில் தான் வந்தே பாரத் உபயோகமாக இருந்தது. மதுரையிலிருந்து பெங்களூரு. பெங்களூரிலிருந்து மந்த்ராலயம். திரும்பும் போதும் இதே ரயில்கள் தான். இது தான் இறுதி செய்யப்பட்ட பயணத் திட்டம்.

காலை ஐந்தேகாலுக்கு மதுரையிலிருந்து பெங்களூருக்குக் கிளம்பும் ரயிலில் ஏறினால் மதியம் ஒரு மணிக்கு அது கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தை அடையும். அங்கிருந்து ஓர் ஆட்டோ பிடித்து எஸ்.எம்.வி.டி எனப்படும் ரயில் நிலையத்தை அடைய வேண்டும். சரியாக 2.40க்கு கலபுருகி செல்லும் வந்தே பாரத்தில் ஏறினால் 8.20க்கு மந்த்ராலயம் அடைந்து விடலாம். ஒரே ரயிலில் நீண்ட நேரம் பயணம் செய்யும் களைப்பும் அலுப்பும் இதில் சற்று குறையும். அப்படித் தான் டிசம்பர் பதிநான்காம் தேதி இரவு மந்த்ராலயம் ரோடு சந்திப்பை அடைந்தோம். அங்கிருந்து மந்த்ராலயம் கோயிலுக்குச் செல்ல வரிசையாக ஷேர் ஆட்டோக்கள், கார்கள் அணிவகுத்து நிற்கும். காரில் செல்ல நூறு ரூபாய். ஆட்டோவிற்கு தலைக்கு ஐம்பது ரூபாய். தனி ஆட்டோ வேண்டும் என்றால் நாநூறு ரூபாய். ஏனெனில் எட்டு பேர் சேர்ந்து செல்லும் தொகையை நாம் கொடுக்க வேண்டும்.

ஆறு பேர் மட்டுமே இருக்க நூறு ரூபாயை மூன்று குடும்பங்களும் பகிர்ந்து கொள்ளலாமெனப் பேசிப் பத்து நிமிடமாக உறுமிக்கொண்டிருந்த ஆட்டோவைக் கிளப்பச் சொன்னோம். “இருங்க சார் இன்னொரு வண்டி வந்துட்ருக்கு” என்று வராத ட்ரெயினுக்காகக் காத்திருந்தார். “கெளம்புப்பா குளிருது” என்று விரட்ட, முழு மனசில்லாமல் வண்டியை எடுத்தார். பதினைந்து கிலோமீட்டர் ஆட்டோ பயணம். கோயிலுக்குச் சற்று முன்னே ஒரு நுழைவாயில் வளைவுக்கு முன்பு நிறுத்தி இறக்கி விட்டார். இறங்கிப் பார்த்ததும் மிகப் பெரிய மலைப்பு. சாலை முழுதும் மக்கள் வெள்ளம். மறுநாள் ஞாயிறு விடுமுறை. பௌர்ணமி என்பதால் மொத்தமாகக் கிளம்பி வந்து விட்டார்கள் போல. இறங்கியதும் பக்கத்திலேயே உள்ள முன்பதிவு அலுவலகத்திற்குச் சென்று பெயரைச் சொன்னோம். உங்கள் பெயரில் பதிவுகளே இல்லையென்று பீதியைக் கிளப்பினார். நமக்கு உறுதியளித்த கோயில் ஆசாமி போனை எடுக்கவே இல்லை. திரளாக மக்கள் வந்து விசாரிக்க அறை இல்லை என்ற ஒற்றை பதிலைச் சொல்லவே அங்கு மூன்று பேர் அமர்ந்திருந்தார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!