Home » மதுரை

Tag - மதுரை

திருவிழா

மீனாட்சி வீட்ல விசேஷம்

மதுரை மக்கள் மட்டுமல்லாது தென்மாவட்டங்களில் வசிக்கும் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு திருவிழா. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், செப்டம்பர் 17 அன்று விமரிசையாக நடைபெறுகிறது. மதுரை மக்களைப் பொறுத்த வரை, தங்கள் வீட்டில் நடக்கும் ஒரு விசேஷம் போலத்தான் இதைப் பார்க்கிறார்கள். பொதுவாகவே...

Read More
முகங்கள்

பேனாக் கடை சீனி தாத்தா

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் செல்லும் வழியில் டெம்பிள் பார்க் என்ற ஹோட்டல் உண்டு. அதன் வாசலில் ஒரு ஓரத்தில் உள்ள பேனாக்கள் ரிப்பேர் செய்யும் சிறிய கடை. கடை என்று கூடச் சொல்ல முடியாது. ஒரு அடி நீள மேஜை. உடைந்து போன பிளாஸ்டிக் நாற்காலி. அதில் ஒரு அட்டையை வைத்துக் கட்டி வைத்திருக்கிறார். கோவில் பக்கம்...

Read More
சமூகம்

ஆதித் தாய் முதல் ஆடி அம்மன் வரை

பிறந்து முதல் முறை நீர்வீழ்ச்சியைப் பார்க்கும் குழந்தைகள் உடனே அழுகின்றன, இல்லை கைகொட்டிச் சிரிக்கின்றன. முதல் மழை, மின்னல், நெருப்பு எல்லாம் ஆதி மனிதனுக்கு விந்தையென இருந்திருக்கும். இன்றும் கூர்ந்து பார்த்து யோசித்தால் நமக்கும் இவை பேரதிசயமே. மனிதன் இயற்கையில் தேடுவது இவ்வியப்பையே. அவனை அதிரச்...

Read More
புத்தகக் காட்சி

மதுரைப் புத்தகக் காட்சி ரவுண்ட் அப்

மதுரை புத்தகக் காட்சி செப்டம்பர் ஐந்தாம் தேதி முதல் பதினைந்தாம் தேதிவரை தமுக்கத்தில் நடைபெறுகிறது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட பெரிய அரங்கமாக இருப்பதால் வருவோருக்கு சோர்வு அதிகமாக இல்லை. ஞாயிறன்று காலை மாலையென இரண்டு நேரமும் சென்றோம். காலையில் இருந்ததை விட மாலையில் நல்ல கூட்டமும் இருந்தது...

Read More
உணவு

சும்மா கிழி!

ஆறுமாதக் குழந்தையின் பிஞ்சு உள்ளங்கையைப் போல மென்மையானது அந்த வெள்ளை உருண்டை. ஓர் உழைப்பாளியின் பதினைந்து நிமிடத்தை மைதா மாவில் குவித்த பின் கிடைப்பது. இதற்குப்பின் ஒரு கலைஞரின் கைப்பட்டு இது பரோட்டாவாக மாறுவது ஒரு கண்கட்டி வித்தை. அந்த மென்மையைக் கையாள, எண்ணெய்யில் தனது கைகளை நனைத்துக் கொள்வார்...

Read More
திருவிழா

சூப்பர் ஹீரோ அழகர்

“வாராரு வாராரு அழகரு வாராரு” என்ற தேவாவின் திரைப்பாடலும், வைகைக் கரையின் முழங்கால் மட்ட நீரில் இளைஞர்கள் நடனமாடும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸும்தான் இப்போதெல்லாம் சித்திரைத் திருவிழா என்றதும் நினைவில் வருகிறது. இன்ஸ்டாகிராம் காலத்திற்கு முன்பே மதுரையும் அழகரும் பரிச்சயம் என்பதால் வேறு...

Read More
விழா

தீ என்றால் தீ தான்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபத்து நான்காவது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் ஏப்ரல் இரண்டாம் தேதியிலிருந்து ஆறாம் தேதிவரை நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலினும் கேரளா முதல்வர் பினராயி விஜயனும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்காளம், தில்லி போன்ற இடங்களிலிருந்து...

Read More
ஆன்மிகம்

காசு, கார்டு, கடவுள்

ஸ்ரீராகவேந்திரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில், மந்த்ராலயம். தமிழகத்தின் முக்கியமான நகரங்களான சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்றவற்றிலிருந்து மந்த்ராலயத்தை அடையப் பன்னிரண்டிலிருந்து பதினேழு மணி நேரம் வரை ஆகும். நேரடியாகப் போகும் ரயில்கள் குறைவாக இருப்பதால் மும்பை செல்லும் ரயில்களை நம்பியே இருக்க...

Read More
ஆளுமை

(எக்ஸ்ட்ரா) ஆர்டினரி கணேஷ்

வயது முதிர்வு, உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ்(80) கடந்த ஞாயிறன்று காலமானார். “உறக்கத்திலேயே உயிர் பிரிந்தது. கஷ்டப்படவும் இல்லை கஷ்டம் கொடுக்கவும் இல்லை” என்று அவரது மருமகன் சதீஷ் நாராயணன் சொன்னார். “சனியன்று இரவு கூட வழக்கம்போலப் பேசிக்கொண்டிருந்தார். கடந்த இரண்டு...

Read More
தொழில்

ஸ்டார்ட் அப் திருவிழா

ஸ்டார்ட் அப் கம்பெனிகள் திருவிழா, செப்டெம்பர் 28, 29 தேதிகளில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. மரபான திருவிழாக்களுக்குப் பெயர் போன மதுரையில் நிறுவனங்களுக்கான இந்த புதுமைத் திருவிழாவும் சிறப்பாக நடந்தது. எண்ணிக்கையில் குறைவான பணியாளர்கள், குறைந்த மூலதனம், புதுமையான காலத்துக்கு ஏற்ற யோசனை...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!