Home » சேர்த்து வைத்துப் படி!
அறிவியல்-தொழில்நுட்பம்

சேர்த்து வைத்துப் படி!

தினமும் பல இணைய முகவரிகளை நாம் கடக்கிறோம். ஒரு சில கட்டுரைகளைப் படித்தவுடன் இது முக்கியமானது என்று தோன்றும். அதே போல வாட்ஸ்ஆப்பில் அல்லது பேஸ்புக்கில் வரும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுரை நம் ஆர்வத்தைத் தூண்டும். ஆனால் அப்போது படிக்க நேரமிருக்காது. இந்த மாதிரி சுழல்களில் கட்டுரையின் முகவரியைச் சேமித்து வைத்துக் கொண்டால், பின்னர் நேரம் கிடைக்கும் போது பார்க்க வசதியாக இருக்கும்.

கட்டுரைகள் என்றில்லை, வீடியோக்களாக இருக்கலாம், பாட்காஸ்ட் ஒலிப்பதிவுகளாக இருக்கலாம், எல்லா வகையான இணைய முகவரிகளைப் பட்டியலாகச் சேர்த்து வைப்பது புக்மார்க்கு (Bookmark) சேவைகள். பொதுவாக நாம் பயன்படுத்தும் இணைய வலையுலாவிகளிலேயே இதற்கான வசதியிருக்கும். இருந்தாலும் தனியான செயலியில் செய்வது சிறப்பு. ஏனென்றால் புக்மார்க்குகளை நிர்வாகம் செய்யும் வசதிகள் கிரோம், ஃபயர்பாக்ஸ் போன்றவற்றில் நன்றாக இருக்காது. இதற்காகவே இருந்த செயலி பாக்கெட், இது ஃபயர்பாக்ஸ் வலையுலாவியைத் தயாரிக்கும் மொசில்லா நிறுவனத்தின் படைப்பு. சென்ற மாதம் (மே 2025) இந்தச் சேவையை நிறுத்திக் கொள்கிறோம் என்று அறிவித்துவிட்டது மொசில்லா. பல ஆண்டுகளாக எல்லாக் கணினிகளிலும் புக்மார்க்குகளை சேமிக்கப் பலர் பயன்படுத்துவது இதையே. இதிலிருந்து மாற வேண்டிய தேவை இப்போது. மாற்றாக ரெயின்ட்ராப்.ஐஓ (Raindrop.io) செயலியைச் சொல்லலாம். இந்த வகையில் இருக்கும் செயலிகளிலேயே எளிதாகவும், நன்றாக வடிவமைக்கப்பட்டதாகவும் இருக்கிறது ரெயின்ட்ராப்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!