வண்ணநிலவன், ராமச்சந்திரன் என எனக்கும், நான் கோபால் என்று அவருக்கும் அறிமுகமானது 1970ல். அப்போது அவரது கையெழுத்துப் பிரதியான ‘பொருநை’க்கு ஒரு கவிதை தரும்படி வண்ணதாசன் என்னிடம் சொன்னார். நான், ‘அவளுக்காய்..’ என்று ஒரு காதல் கவிதை கொடுத்தேன்.
”அவள் நாடாளும் ராணியானாள்
நான் அவளுக்காய்
நடக்காத போர்க்களத்தில் வீரனானேன்..”
என்று உருக்கமாய்(!) நீளும் அந்தக் கவிதை. அதைக் கொடுக்கும் போதுதான் ஏதோ மின்னல் வெட்டியது போல ‘கலாப்ரியா’ என்ற பெயர் மூளைக்குள் தோன்றியது. அந்தப் பெயரில் வண்ணநிலவனுக்கு அவ்வளவு பெரிய மகிழ்ச்சி. பொருநை வாசகர்களெல்லாமும் (அதிகம் போனால் பத்துப் பேர் இருப்பார்கள்) ரொம்ப சந்தோஷப்பட்டதாகச் சொல்லிக் கொண்டேயிருந்தார். அதைவிட என் முதல் கவிதை கசடதபற இதழில் பிரசுரமானதற்கு என்னைவிட அவரே அதிகச் சந்தோஷம் அடைந்தார். என்னைப் பற்றிக் கேட்பானேன்? மேகத்தில் மிதக்காத குறைதான். ஆனால் வண்ணநிலவனது கதைகள் சாந்தி, தாமரை என அச்சிதழ்களில் வெளிவரத் துவங்கிய போது அவர் அடக்கமாகவே இருந்தார். எப்போதுமே அவர் அப்படித்தான்.
தமிழ் தினசரியான “தி இந்து ” இதழில் ஒரு தீபாவளிபண்டிகையை ஒட்டி கவிஞர் திரு.ஷங்கர்ராமசுப்பிரமணியன் அவர்கள் வண்ணதாசன்,வண்ணநிலவன், விக்கிரமாதித்தியன், மற்றும் தங்களையும் ஒருங்கிணைத்து ” நான்கு சகோதரிகள்” எனும் தலைப்பில் உரையாடல் பதிவு மேற்கொள்ளப்பட்டு அந்த தீபாவளியினை என்றும் நினைவில் உள்ளதாக மாற்றியது.
தற்போது “விளக்கு விருது” பெறும் திரு.வண்ணநிலவன் அவர்களைப்பற்றிய தங்களின் மேற்காண் பதிவினை எனது எதிர்வரும் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே உணர்கிறேன்.