ரிஷிமுக பர்வதத்தில் இதமான காற்று ஒத்திசைந்து வீசியது. ஒரு பெருவிருட்சத்தின் அடியில் அமர்ந்து ராமன், லட்சுமணன், சுக்ரீவன் ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.
“சுக்ரீவா, நீ செய்ய வேண்டியதெல்லாம் வாலியை உன்னுடன் நேருக்கு நேராக யுத்தம் புரிய அழைக்க வேண்டியதுதான். முடிவு என் கையில்.” – ராமன் தீர்க்கமாய்க் கூறினான்.
“ராமா, நீ அறியாததா? வாலியை நேரிட்டு மோதிச் சண்டையிட்டால் என் பலத்தில் பாதி போய் விடும். நான் நிச்சயம் வெல்ல முடியாது.” – சுக்ரீவன் பேச்சில் பதற்றம் இருந்தது.
“அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ அவனைச் சண்டைக்கு அழை. அது போதும்.”
semmai
வாலி தாரா கதை சிறப்பு