Home » ரணில்: அதிர்ச்சி வைத்தியக் கைது
உலகம்

ரணில்: அதிர்ச்சி வைத்தியக் கைது

பொதுநிதியைத் தன் தனிப்பட்ட லண்டன் பயணத்திற்குப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எனப்படும் சிஐடியால் ஆகஸ்ட் 22ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இலங்கையின் சரித்திரத்தில் முதன்முறையாக நடைபெறும் ஒரு அரசத் தலைவரின், ஒரு முன்னாள் ஜனாதிபதியின் கைதாக இது வரலாற்றில் பதிவானது.

2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இருந்தார் ரணில். செப்டம்பர் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் University of Wolverhamptonஇல் நடந்த தன் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவின் பி.ஹெச்டி பட்டமளிப்பு விழாவிற்காக அப்படியே லண்டன் சென்றார். இந்தப் பயணத்தில் ரணிலோடு பத்துப் பேர் பங்கேற்றிருந்தார்கள். இதற்கு ஐம்பதாயிரம் அமெரிக்க டாலர், அதாவது அன்றைய நாணய மாற்றுவிதிகளின்படி இலங்கை ரூபாய் ஒரு கோடியே அறுபத்தொன்பது லட்சம் அரச நிதியைப் பயன்படுத்தினார் என்பதுதான் ரணில் எதிர்கொண்டிருக்கும் பிரதானக் குற்றச்சாட்டு.

ரணிலைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்தபோதே ‘ரணில் கைதாவார்’ என்று ஒரு பரபரப்பு நிலவியது. இந்த விவகாரம் தொடர்பாக ரணிலின் தனிப்பட்ட செயலாளரும், முன்னாள் ஜனாதிபதிச் செயலாளரும் ஏற்கெனவே சிஐடியினரால் விசாரிக்கப்பட்டு இருந்தனர். இதன் தொடர்ச்சியாகத்தான் ரணிலும் சிஐடி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்த விசாரணையின்போது ரணில் மிகத் திமிராய்ப் பதில் அளித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!