Home » பாக். வெள்ளம்: பேராசையின் பேரவலம்
உலகம்

பாக். வெள்ளம்: பேராசையின் பேரவலம்

பாகிஸ்தானில் ஜூன் மாத இறுதியில் தொடங்கிய கனமழை, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வடமேற்கிலுள்ள கைபர் பக்துவா மாகாணம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 750க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். சிந்து மற்றும் பஞ்சாப் ஆகிய மாகாணங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வரும் நாட்களில் கனமழை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

உலகிற்கு இயற்கைச் சீற்றங்கள் புதிதல்ல. பெரும்பாலான நாடுகள் இயற்கைச் சீற்றங்களைச் சந்திக்கின்றன. ஆண்டுக்குச் சராசரியாக 40,000 முதல் 50,000 பேர் இயற்கைச் சீற்றங்களால் உயிரிழப்பதாகத் தரவுகள் கூறுகின்றன. இதில் சில நிலப்பரப்புகளின் புவியியல் அமைப்பு அதிக இயற்கைச் சீற்றங்களைச் சந்திக்கக் காரணமாகிறது.

உதாரணமாக, புவித்தட்டுகள் இணையும் பசிபிக் நெருப்பு வளையத்தில் (Pacific Ring of Fire) அமைந்துள்ள ஜப்பான் அதிக அளவில் நிலநடுக்கத்தையும், இந்தோனேசியா எரிமலை வெடிப்புகளையும் சந்திக்கின்றன. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் வறண்ட காலநிலை ஒவ்வொரு வருடமும் காட்டுத்தீயை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவின் மத்திய, தெற்கு மாகாணங்கள் வறண்ட காற்றும், ஈரப்பதமான காற்றும் சந்திக்குமிடங்கள் என்பதால் அங்கு அதிகச் சூறாவளிகள் ஏற்படுகின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!