Home » ரேன்சம்வேர் என்றொரு பேரிடர்
அறிவியல்-தொழில்நுட்பம்

ரேன்சம்வேர் என்றொரு பேரிடர்

கடத்தி வைத்துக்கொண்டு காசு கேட்பது. இது ஆதிகாலம் முதல் நடந்துவரும் ஒரு குற்றம். இதன் டிஜிட்டல் அவதாரம் தான் ரேன்சம்வேர். தனிநபர்கள், நிறுவனங்கள் என்றெல்லாம் எந்தப் பாரபட்சமும் இல்லை. திருமலை திருப்பதி பாலாஜியைக் கூட இந்த ரேன்சம்வேர்கள் விட்டு வைக்கவில்லை.

சைபர் குற்றங்கள் பெருகிவரும் இன்றையச் சூழலில் ரேன்சம்வேர்கள் குறித்து அறிவது அவசியமாகிறது. நீங்கள் ரேன்சம்வேர் என்னும் சொல்லையே இப்போதுதான் முதல் முறை கேள்விப்படுகின்றீர்கள் என்றாலும் பரவாயில்லை. பாலபாடத்தில் இருந்தே தொடங்குவோம்.

ரேன்சம்வேர் என்பது உங்களது கம்ப்யூட்டரை நீங்களே பயன்படுத்த இயலாமல் செய்யும் ஒரு சாஃப்ட்வேர். அது எப்படி முடியும்..? என்னும் கேள்வி எழலாம். சைபர் உலகில் முடியவே முடியாது என்றெதுவுமே கிடையாது. யாரால் முடியும்; யாரால் முடியாது என்று மட்டுமே உள்ளது.

ரேன்சம்வேர் உங்கள் கம்ப்யூட்டர்களைத் தொற்றும் ஒரு வியாதி. எங்கோ கண்காணாத தூரத்தில் இருக்கும் ஒருவர் உங்களின் கம்ப்யூட்டரை முற்றுகையிடும் செயல். இவை தாக்கியபின் உங்கள் கம்ப்யூட்டர் மொத்தமாய் அவர் வசம் சென்றுவிடும். திரும்பவும் உங்கள் கம்ப்யூட்டரை நீங்கள் இயக்க அவர்கள் கேட்கும் தொகையைச் செலுத்தவேண்டும்.

இங்கு கம்ப்யூட்டர் என்று நான் குறிப்பிடுவது ஹார்ட்வேர் மட்டுமல்ல. அதனுள் இருக்கும் தகவல்கள்தான் இத்தாக்குதலின் முதன்மையான இலக்கு. நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்களின் ஒட்டுமொத்த தகவல் தொழில்நுட்ப அமைப்பும் (Complete Digital Infrastructure) செயலிழக்கும். இதன் மூலம் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு மிகப் பெரியதாக இருக்கும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!