வருடம் 2015 . டெல்லியைச் சேர்ந்த சாகெத் மற்றும் அவனீத் shopclues என்னும் இணைய வர்த்தக நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். இருவரும் கல்லூரிக் காலத்து நண்பர்கள். அப்போது நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட (உபயோகப்படுத்தப்பட்டவற்றைச் சீரமைத்து, மேம்படுத்தி விற்பது) பொருள்களுக்கென்று தனியாக ஒரு பிரிவு தொடங்கப்படுகிறது. அடுத்த ஏழு – எட்டு மாதங்களில் அந்தப் பிரிவின் விற்பனை மட்டும் கிட்டத்தட்ட நாற்பது கோடி.
புதுப்பிக்கப்பட்ட பொருள்களுக்கு இப்படியொரு மவுசா என்று அசந்துபோன சாகேத் – அவனீத் நண்பர்களுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நாம் இதைத் தனியே ஒரு தொழிலாகத் தொடங்கினாலென்ன? அடுத்த சில வருடங்களில் அவர்கள் வேலை பார்த்து வந்த நிறுவனமும் சில காரணங்களால் சரிவைச் சந்தித்தது. சமயம் பார்த்து, இருவரும் வேலையை விட்டுவிட்டு வெளியே வந்தனர்.
துறை சார்ந்து எட்டு வருட அனுபவம். கூடவே அவர்கள் சேமிப்பிலிருந்த நாற்பது லட்சம் ரூபாய் பணம். இன்னும் ஒரு பத்து பதினைந்து லட்சம் இருந்தால் நம்பிக்கையுடன் நிறுவனம் தொங்கி விடலாம் என்று அவர்களுக்குப் பட்டது. வங்கி மூலம் கிடைத்த கடனையும் சேர்த்து 55 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்டது தான் Refit குளோபல்.
Good one but could hAve added some more on mobiles
when so much money at store how come this industry is going to go away..it will only flourish..spening 50 k and change it after one year is not preferred. pay 15 k and change it in every six months you get a better deal and showing off
வருவாய் என்றால் profit / லாபமா ? Revenue என்பதை வருவாய் என்று சொல்கிற மாதிரி இருக்கு.