இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது பாஜக. மொத்தம் உள்ள எழுபது தொகுதிகளில் நாற்பத்தெட்டு தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே டெல்லி சட்டசபைத் தேர்தலில் வென்றது. தேர்தல் வெற்றிக்குப் பிறகே ரேகா குப்தாவை முதல்வராக பாஜக அறிவித்தது.
இவர் டெல்லியின் ஒன்பதாவது முதலமைச்சர். டெல்லியின் நான்காவது பெண் முதலமைச்சரும் கூட. சட்டமன்ற உறுப்பினராக முதல் முறையாக வெற்றி பெற்ற ரேகா குப்தாவை முதலமைச்சராக பாஜக தேர்ந்தெடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Add Comment