Home » சபரிமலை: குளறுபடிகளும் குற்றச்சாட்டுகளும்
சமூகம்

சபரிமலை: குளறுபடிகளும் குற்றச்சாட்டுகளும்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே சன்னிதானத்தின் நடை திறக்கப்படும் போதெல்லாம் சர்ச்சைகள், விபத்துகள் எனத் தலைப்புச் செய்திகளில் சபரிமலை இடம்பெற்றுவிடுகிறது. இந்த வருடம் பம்பை நதியில் ‘மூளையை உண்ணும் அமீபா’ இருப்பதாக ஒரு செய்தி வெளியானது. அடுத்ததாக, கூட்ட நெரிசலில் ஏற்பட்ட மாரடைப்பால் ஒன்பது பக்தர்கள் உயிரிழந்ததாகச் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சர்ச்சைகளும் விபத்துகளும் பெரிதாகப் பேசப்பட்டாலும், மண்டல பூஜை காலத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. 2023-24ஆம் ஆண்டு கணக்குப்படி 50 லட்சத்தைக் கடந்த இந்த எண்ணிக்கை, இந்த வருடம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

​இத்தனை கூட்டத்தை இழுத்து வரும் ஐயப்பனுக்குப் பல்வேறு புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன. ‘மகிஷி’ என்ற அரக்கியை அழிக்க விஷ்ணு மோகினியாக மாறி சிவனுடன் இணைந்ததால் பிறந்த ஹரிஹர புத்திரன்தான் ஐயப்பன் என்பது ஆன்மிகம் சொல்லும் அவதாரக் கதை. மற்ற இந்துக் கோவில்களுடன் ஒப்பிடும்போது சபரிமலை பழமையானது அல்ல. பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோவிலுக்கும், ஐயப்பன் என்ற பெயருக்கும் பின்னால் இன்னொரு யதார்த்தமான கதை உண்டு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!