Home » சாமி சரணம்!
ஆன்மிகம்

சாமி சரணம்!

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை முதல் வாரம் தொடங்கி தை முதல் வாரம் வரை சபரிமலை அய்யப்பன் சீசன் களைக் கட்டத் தொடங்கும்.

ஆறு வாரங்கள், ஒரு மண்டலம் எனக் கடுமையான விரதமிருந்து சபரிமலை வாசனை தரிசிப்பது பல்லாண்டு காலமாகக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. பொதுவாக கார்த்திகை ஒன்றாம் தேதி மாலை அணிந்து விரதமிருப்பது பெரும்பாலான பக்தர்கள் கடைப்பிடிக்கும் நடைமுறை.

அதற்கும் முன்னரே மாலை அணிந்து கார்த்திகை முதல் வாரத்தில் அய்யப்பனைத் தரிசிக்கும் வழக்கமும் இருக்கிறது. கார்த்திகை மாதம் முழுவதும் அய்யப்பன் கண்விழித்திருப்பார். பக்தர்கள் வேண்டும் வரங்களைக் கொடுப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதற்கிடையில் அவரவர் சூழல் காரணமாகக் குறைந்த நாட்கள் மாலை அணிந்து விரதமிருந்து அய்யப்பனைத் தரிசிப்பதும் இன்னொரு நடைமுறை. அவரவர் வசதி அவரவர் வழிபாடு.

கொரோனாவால் பக்தர்கள் இரண்டாண்டுகள் சபரிமலைக்குச் செல்ல முடியாமல் இருந்தது. இதனால் கடந்த 2023ஆம் ஆண்டு பக்தர்கள் அனைவரும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி சபரிமலை நோக்கி பயணம் செய்தனர். தினமும் இலட்சக் கணக்கான மக்கள் வந்து தரிசித்துச் சென்றனர். யாருக்கும் எந்த சிக்கலுமில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!