Home » சலம் – 76
சலம் நாள்தோறும்

சலம் – 76

76. இனப் படுகொலை

மந்திராலோசனை மண்டபத்துக்குள் விஸ்வபதி நுழையும் முன்புதான் வித்ருவின் கோட்டைக் கதவுகளை இழுத்து மூடச் சொல்லி உத்தரவிட்டிருந்தார். அதிகாலை நடந்தவற்றின் விவரமறியாத பலர் அதற்குள் கோட்டையை விட்டு வெளியேறிச் சென்றிருந்தார்கள். அதைப் போலவே கோட்டைக்கு வெளியிலிருந்தும் பலர் உள்ளே வந்திருந்தார்கள். அம்முடிவை இன்னும் சற்று முன்னதாக எடுத்திருக்கலாம் என்று சபையில் இருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள். ஆனால் பதற்றம் மிகுந்த தருணத்தில் கோட்டை வாயிலைக் குறித்து யாருக்கும் எண்ணிப் பார்க்கத் தோன்றியிருக்கவில்லை. சங்காவின் மரணம் ஒரு கொலைச் செயல் என்ற அளவில் முடிந்திருந்தால்கூட அந்தளவு பதற்றம் மிகுந்திராது. அதன் வாலில் கட்டப்பட்டிருந்த ரோமம் சுற்றிய நத்தை ஓடு, விஸ்வபதியை நிலைகுலையச் செய்துவிட்டிருந்தது.

சபைக்கு வந்திருந்த பிராமணர்கள், உடனடியாகப் பரிகார யாகங்களுக்கு ஆயத்தமாகக் கேட்டுக்கொண்டார்கள். விஸ்வபதியின் குலகுரு, சரஸ்வதியிலிருந்து நீர் எடுத்து வந்து கோட்டைக்குள் மூலை முடுக்குகளெல்லாம் தெளிக்க உத்தரவிடச் சொன்னார். சங்காவின் வாலில் செய்வினை ஓட்டினைக் கட்டிவிட்டுச் சென்றவன் யாராக இருந்தாலும் கண்டறிந்து இரு துண்டங்களாக்க வேண்டும் என்று சூரபதி முழங்கினார். இப்போது கூட்டத்தில் ஒருவனாக நின்றிருந்த குத்சன் குரல் கொடுத்தான்.

‘ராஜனே, இக்கணம் புரத்துக்குள் சுற்றிக்கொண்டிருக்கும் கோட்டைக்குள் வசிப்போர் அல்லாத அனைவரையும் பிடித்து நிறுத்திப் பரிசோதனை செய்யச் சொல்லுங்கள். நீங்கள் தேடுபவன் நிச்சயம் அகப்படுவான்’ என்று சொன்னான்.

‘எப்படிச் சொல்கிறாய்? அவன் நிச்சயமாகத் தப்பித்துச் சென்றிருக்க வேண்டும்.’

‘மாட்டான் ராஜனே. வைத்த வினை இப்போது அகற்றப்பட்டிருக்கிறது.’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!