Home » சலம் – 77
சலம் நாள்தோறும்

சலம் – 77

77. பிராயச்சித்தம்

அவன் அறியாவிடினும் அவன் ஒரு முனி என்று நான் நம்பினேன். என் நம்பிக்கை உணர்ச்சிகளினால் உருவேற்றப்பட்டதல்ல. நான் உணர்ச்சியற்றவன். மிகப்பல சம்வத்சரங்களுக்கு முன்னர் சிறுவனாக அவன் தனது தாயுடன் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்தபோது முதல் முதலில் அவனைத் தனித்துச் சந்திக்கும் தருணம் எனக்கு நேர்ந்தது. அதுவரை திறந்திராத என் இடது கண்ணைத் திறந்து, இரு விழிகளாலும் அவனை நான் கண்டேன். அதன் பொருள் அவனுக்குத் தெரியாது. அதற்குப் பிறகு இக்கணம் வரை யாருக்காகவும் எனது இடக்கண் திறந்ததில்லை. அதையும் அவன் அறியமாட்டான். கருக்கொண்டு பிறந்த யாரும் இரண்டு விழிகளால் எதையும் பார்ப்பது சாதாரணம். பூச்சிகளும் பறவைகளும் மிருகங்களும்கூட அதைத்தான் செய்கின்றன. கரு காணாது உருக்கொண்டவனுக்கு சிந்தையொன்றே உறுப்பு. ஒற்றைச் சக்கரமாக உருண்டுகொண்டிருப்பவனுக்கு ஒரு விழி மட்டுமே திறந்திருக்கும். அது நியாயங்களை அறியாது. தருமமொன்றே அதன் நியதி.

இதை எப்படி நான் அவனிடம் எடுத்துச் சொல்வேன்? சொன்னால் புரியுமா? அவனுக்கல்ல. யாருக்குமே. இன்றல்ல; என்றென்றும் இது இப்படித்தான். இது பற்றி எனக்கு வருத்தங்களில்லை. கவலைகளில்லை. ஏக்கமோ இன்னொன்றோ இல்லை. நானென்பது இன்னொன்றின் கரங்களில் இருக்கும் பொருளென்று புரிந்துவிட்டால் சிக்கல் இராது. அவனுக்குத் தான் யாரென்று தெரியாததுதான் எல்லாச் சிக்கல்களுக்கும் அடிப்படையாகிப் போனது.

‘நாசமாய்ப் போனவனே! அதைத்தானே உன்னைக் கண்ட நாளாகக் கேட்டுக் கதறிக்கொண்டிருக்கிறேன்? சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே?’ என்று மதங்கொண்டு சீறி வந்து அவன் என்னைப் பிடித்துத் தள்ளினான். நான் அசையாது நின்றேன். அவன் பார்வையில் அருவருப்புணர்வு சொட்டுச் சொட்டாக உதிரத் திகைத்துப் போய்ப் பார்த்தபடி நின்றான். நானொரு கட்டை அல்லது தக்கை என்பது அவனுக்குத் தெரியும். பிடித்துத் தள்ளினால் விழமாட்டேன் என்பதை அறிவான். தாக்கினால் காயமுற மாட்டேன் என்பதும் அவனுக்குத் தெரியாததல்ல. ஆயினும் அவன் அப்படிச் செய்ததைத்தான் சுட்டிக் காட்டினேன்.

‘முனியே, உன் அறிவை எது மறைக்கிறது என்று இதனைக் கொண்டாவது பரிசீலித்துப் பார்.’

‘அது எந்தக் கருமமாக இருந்தால் எனக்கென்ன? எத்தனை சம்வத்சரங்கள் கடந்தாலும் என் விஷயத்தில் உன்னை ஒரு பிணமாகவே கிடத்தி வைப்பது எதுவென்று நீ முதலில் சொல்.’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!