Home » சலம் – 83
சலம் நாள்தோறும்

சலம் – 83

83. விருத்திரன்

நான் சரியாகத்தான் இருந்தேன். தெளிவாகவும் இருந்தேன். சுகக்கேடு ஏதும் உண்டாகியிருப்பதாகத் தெரியவில்லை. நிற்க, நடக்க, ஓட, குதிக்க எல்லாம் முடிந்தது. பேச்சு தெளிவாக இருந்தது. செவியில் விழும் ஒவ்வொரு ஒலியும் துல்லியமாக இருந்தது. எப்போதும் போலச் சிந்தித்தேன். அதிலும் சிக்கலேதும் இருக்கவில்லை. ஆனபோதிலும் ஏதோ சரியாக இல்லை என்று தோன்றியது.

நம்மைக் குறித்து நமக்கொரு கருத்து இருக்கும் அல்லவா? வெளியே சொல்லிக்கொள்வது வேறொன்றாக இருக்க நேர்ந்தாலும் நமது அசல் தரம் நமக்குத் தெரியும். எனக்கு அப்போது அந்த விஷயத்தில்தான் குழப்பம் வந்தது. எனது கற்பனைகள் சார்ந்த குழப்பம். முதலில் அது கற்பனைதானா என்கிற குழப்பம். முனியோடு வாழ்ந்த நாள்களில் என் மனத்துக்குள் இருப்பதைப் படிப்பதாகவும் தான் சொன்னவற்றில் விடுபட்டவற்றை அவனே என் சிந்தையில் இட்டு நிரப்புவதாகவும் சொல்லியிருக்கிறான். உண்மையில், அவன் மனத்தைப் படித்தது எனக்குத் தெரியும். எனக்குள்ளே சிந்திப்பதை அவன் உடனுக்குடன் வினாவாகக் கேட்டுவிடுவான். தொடக்கத்தில் அது பற்றிய சிறியதொரு வியப்பு இருந்தாலும், தவம் இருந்து வரம் பெற்ற ஒரு முனி அதைக்கூடச் செய்ய மாட்டானா என்று எனக்குள் அதனைச் சாதாரணமாக்கிக்கொண்டேன். ஆனால் விடுபட்ட விவரங்களை இட்டு நிரப்பியதாக அவன் சொன்னது எனக்கு விளங்கவில்லை. சிந்தித்துப் பார்த்தபோதும் புதிதாக எந்தத் தகவலும் கிடைத்ததில்லை. அவனது சரிதத்தின் அனைத்துப் பக்கங்களையும் அவன் திறந்து வைத்துவிட்டான் என்றுதான் எப்போதும் தோன்றும். அது எதற்கு என்று எனக்குத் தெரியாது. இதெல்லாம் எனக்கு எதற்கு என்று கேட்டதுமில்லை. அவன் சொன்னான், நான் கேட்டுக்கொண்டேன். அவ்வளவுதான். அவன் ஒன்றுமே சொல்லியிராவிட்டாலும், அவனை நான் சந்தித்தேயிராவிட்டாலும் அந்த பிராமணனைக் கொல்வது என்னும் என் முடிவில் எந்த மாற்றமும் இருந்திருக்கப் போவதில்லை.

இதை ஒருமுறை அவனிடமே சொல்லியும் இருக்கிறேன்.

‘உன் வழியில் நீ சென்றுகொண்டே இரு. எதனை உத்தேசித்துப் புறப்பட்டு வந்தாயோ, அதைச் செய்து முடி. ஆனால் நான் செய்ய வேண்டியவற்றை நான்தானே செய்ய வேண்டும்?’ என்று அவன் கேட்டான்.

‘எது? உன் கதையை எனக்குச் சொல்வதா?’

‘அதுவும்தான்.’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!