பக்கத்தில் வந்துவிட்ட பாராளுமன்ற தேர்தல் வேலைகளை ஆரம்பித்தல், மாநில கூட்டணியில் தற்போதுள்ள பலத்தினை தக்கவைத்தல், அதனை அதிகப்படுத்துதல், பிரதமர் பதவிக்கான போட்டியில் தானும் இருப்பதை நேரடியாக மத்தியக் கூட்டணிக் கட்சிகளுக்குத் தெரியப்படுத்துதல், உதயநிதியைக் கட்சியில் சீனியர்கள் மூலமாகவே முன்னிறுத்துதல், கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகம் கொடுத்தல், தமிழ்நாட்டு மக்களிடையே தி.மு.க. ஆட்சி பற்றி இருக்கும் மனோபாவத்தினைக் கணித்தல், சின்னச்சின்ன உட்கட்சி பூசல்களைச் சமாளித்தல் அல்லது அடக்குதல், மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் கெத்து காட்டுதல்…. இப்படிப் பல்வேறு வகையான மல்டி டாஸ்க் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டு, வெற்றிகரமாகச் சேலத்தில் நடந்து முடிந்துள்ளது திமுகவின் இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு.
கடந்த 2007-ம் ஆண்டு நடந்த முதலாவது மாநில மாநாட்டினை அடுத்து இந்த இரண்டாவது மாநாடு கடந்த 2023 டிசம்பர் மாதமே நடந்து முடிந்திருக்க வேண்டியது. தமிழகத்தில் டிசம்பர் மாதம் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களால் இரண்டுமுறை தள்ளிப்போடப்பட்டு இந்த ஜனவரி 21ம் தேதி நடந்து முடிந்துள்ளது.
Add Comment